பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 120 தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போக்கி வெறுங்கையோடு இலங்கை புக்கான்” என்பது கம்பனுடைய புகழ்மிக்க கவிதையாகும். இராவணன் மாவீரன். இராமனுக்கு இணையானவன். யானைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றவன். கைலாச மலை யையே தனது கட்டை விரலால் அ ைசத்தவன். தேவர்களையெல்லாம் வென்றவன். பெரும் தவங்கள் செய்து சிறந்த வரங்களும் பெற்றவன். வேதங்களைக் கற்றவன். இலங்கையைச் செல்வவளம் மிக்க நாடாக வளர்த்தவன். இசைப்புலமையில் நாரதனுக்கு ஈடானவன். அறத்தைத் தவிர்த்து மறவழியில் நின்றான். தான் என்னும் அகங்காரத்தின் உச்சியில் நின்றான். நல்லவர்களின் அறவுரைகளை நிராகரித்தான். இராமனை ஏழை மானுடன் என்று இகழ்ந்தான். குரங்குப்படையைக் குறைவாக மதித்தான். (இங்கு குரங்குப் படையென்பது சமுதாயக் கருத்தில் சாதாரண மக்கள் கூட்டம் என்பதாகும்) முதல் நாள் போரிலேயே தனது பத்து மகுடங்களையும், சங்கரன் கொடுத்த வாளையும் வீரத்தையும் களத்திலே போட்டு விட்டு வெறுங்கையோடு இலங்கை சென்றான். இங்கு மானுடத்தின் முதல் வெற்றியைக் கம்பன் மிகவும் அழகாகக் கம்பீரமான தமிழ் நடையில் சிறந்த இலக்கிய நயத்துடன் விவரித்துக் கூறுவதைக் காண்கிறோம். முதல் நாட் போரில் தோல்வி கண்ட் இலங்கை வேந்தன் தன் மாளிகைக்குச் சென்று அமைதியூாகி அமர்ந்தான். மாலியவான் மீண்டும் வந்து இராவணனுக்கு' போரை நிறுத்தும் படி அறிவுரை கூறுகிறான். வரக்கூடிய தீமைகளைக் குறித்து உனக்குச் சொன்ன போதும் நீ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கிளைதரு சுற்றம், வெற்றி, கேண்மை, நமது கல்வி, செல்வம் முதலிய அனைத்தும் ஒழிந்து விடும் என்று மீண்டும் கூறி எச்சரிக்கை விடுகின்றான். மாலியவானைத் தடுத்து மகோதரன் “வென்றவர் தோற்பர் தோற்றோர் வெல்குவர் எவர்க்கும் மேலாய் நின்றவர் தாழ்வர், தாழ்ந்தோர் உயர்வர், இது இயற்கையின் நெறியேயாகும். எனவே