பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை-அ-சீனிவாசன் |22 - கும்பகருணன் மனம் வருந்தித்தன் அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டு விடை பெற்றுக் கொண்டு) போர்க்களத்திற்குச் சென்றான். கும்பகருணன் மிகுந்த வீரத்துடனும் உறுதியுடனும் போர் செய்தான். வானரப் படையைக் கலக்கினான். மாருதியையும் இலக்குவனையும் எதிர்த்துப் போராடினான். சுக்கிரீவனையும் எதிர்த்துப் போரிட்டு அவனைத் துக்கிக் கொண்டு சென்றான். இராமன் தலையிட்டு கும்பகருணன் மீது தனது கணைகளை ஏவினான். இராமனை எதிர்த்தும் கும்பகருணன் வீரத்துடன் போர் புரிந்தான். இராமன், கும்பகருணனுடைய இரு கரங்களையும் வெட்டினான். இரு கால்களையும் வெட்டினான். கடைசியில் அவனுடைய கழுத்தை வெட்டி, தலையை ஆழ்கடலில் மூழ்கடித்தான். கும்பகருணன் போர்க்களத்தில் கொல்லப்பட்ட செய்தி கேட்டு இராவணன் மிகுந்த துயரமடைந்தான். கோபாவேசம் கொண்டான். “கல்லன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும் மல்ஒன்று தோளாய் வட மேரு? மானுடவன் வில்லொன்று நின்னை விளித்துளது என்னும் சொல்லன்றோ என்னைச் சுடுகின்றது தோன்றலால்” பேராற்றலும் மன உறுதியும் மிக்க எனது தம்பி கும்பகருணனை ஒரு மானிடவனுடைய வில்ஒன்று கொன்று விட்டது என்னும் சொல் அல்லவா என்னைச் சுடுகின்றது என்று மனம் திேற்ேே கொண்டு, "அக்கணத்து மந்திரியார் ஆற்றச் சிறிது ஆறி இக்கணத்து மானிடவர் ஈரக்குறுதியால் முக்கைப்புனல் உகுப்பேன் எம்பிக்கு என முடியா திக்கனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான்” என்று கம்பன் மிக நயமாக எடுத்துக் கூறுகிறார்.