பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ғылшейт — бәсъ годалилд штвовал —ғу. ЗаПатетейт. 126 “முரண் தடம் தண்டும் ஏந்தி மனிதரை முறைமை குன்றப் பிரட்டரின் புகழ்ந்து பேதை அடியரின் தொழுது பின் சென்று” என்றும் “மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய் இனி உனக்கென்னோ மானம் எங்களோடு அடங்கிற்றன்றே” என்றும் “ஊன் உடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்தெய்தும் மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே நீயும் அன்னான் தான் உடைச்செல்வம் துய்க்கத் தகுதியே சரத்தினோடும் வானிடைப் புகுதியன்றே, யான் பழி மறுக்கில், என்றான்” இவ்வாறு பலவாறாக இந்திரசித்தன் வீடணனைக் கண்டித்தும் இகழ்ந்தும் குறைத்தும் கேவலப்படுத்தியும் பேசுகிறான். வீடணனோ எதற்கும் அசையாமல் தர்மத்திலிருந்து சிறிதும் பிரள மாட்டேன் என்று உறுதியாக நின்று பதிலளிக்கிறான். இந்திரசித்தன் வீடணனை இகழ்ந்து பேசியதைப் பற்றிக் குறிப்பிடும் போது மகாகவி கம்பன் “மனிதரை முறைமை குன்ற','மனிதருக்கு அடிமையாய் நீ','மருந்தினால் உயிர்வந்து எய்தும் மானிடர்” என்றெல்லாம் வீடணனுடன் சேர்த்து இணைத்து மானிடரையும் இகழ்ந்து பேசுவதை இணைத்துக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். இந்த வார்த்தைகளில் நுணுக்கமான அரசியல் கருத்துக்களும் பொதிந்திருப்பதையும், அடிமை நிலையைக் கடுமையாக நிராகரிப்பதையும் காணலாம்.