பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை-அ.-சீனிவாசன் 128 சென்று தனது மகனுடைய உடலை எடுத்து வருகிறான். பஞ்சு எரியுற்றிது என்ன அரக்கர்தம் பரவையெல்லம், வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே, மீண்டதில்லை” என்று மண்டோதரி புலம்புகிறார். இங்கும் “மனிதர் கொல்ல என்னும் சொற்கள் மண்டோதரி வாயால் வருவதைக் காண்கிறோம்”. இராம இராவணப் போரின் அடுத்த கட்டமாக இலங்கையின் மூலபலப்படை வருகிறது. இராவணனுடைய மூலபலப்படை மிகுந்த சக்தி வாய்ந்தது. தனிப்பயிற்சி பெற்றது. சிறந்த வலுவான ஆயுதங்களைக் கொண்டது. யாராலும் வெல்ல முடியாத வல்லமை மிக்கது. கொடுரமானது. பயங்கரமான இந்தப் படைகளைக் கண்டவுடன் வானரப்படை பயந்து சிதறி ஓடத் தொடங்கியது. சுக்கிரீவன், அங்கதன், அனுமன் தவிர மற்ற வானரர் எல்லாம் பயந்து ஓடிவிட்டனர். இந்தக் காட்சி கம்பன் காட்டும் மிக முக்கியமான நுட்பமான கருத்து மிக்கக் காட்சியாகும். இது கம்பனுடைய மிகச் சிறப்பான சமூகவியல் கருத்தையும் வெளிப்படுத்துகிறது. “அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர் தனுவின் ஆற்றலும் தம்முயிர் தாங்கவும் சாலா கனிகளும் காய்களும் உணவுளமுழை உளகாக்க மனிதர் ஆளின் என், இராக்கதர் ஆளின் என்வையம் ”. “எங்களைக் காத்துக் கொள்வதற்கு அனுமனுடைய ஆற்றல் போதாது, எங்கள் அரசன் சுக்கிரீவனுடைய ஆற்றலும் போதாது. இராம இலக்குவர் இருவரின் வில்லாற்றலும் போதாது. எங்களுக்கு உண்பதற்குக் காடுகளில் கனிகளும், காய்களும் இதர உணவுப் பொருள்களும் இருக்கின்றன. தங்குவதற்கு மலைகளும் குகைகளும் இருக்கின்றன. இந்த உலகை யார் ஆண்டாலென்ன, மனிதர் ஆண்டாலென்ன, இராக் கதர் ஆண்டாலென்ன” என்று கூறிக்கொண்டு வானரங்கள் ஓடிவிட்டன என்று கம்பன் கூறுகிறார். இது மிகவும் சிந்திக்கத்தக்கக் கருத்தாகும். இதிலிருந்து தான் நமது நாட்டில்; சாதாரணமக்கள் “இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன” என்னும் கருத்தும் பழமொழியும் வந்துள்ளது என்று தெரிகிறது. அல்லது சாதாரண மக்களிடம் நாட்டு வழக்கில் இருந்த இக்கருத்தைக் கம்பன் தனது மாபெரும்