பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை - அ. சீனிவாசன 157 இராமன் மீது காட்டும் சகோதர பாசம் இலக்கியச் சிறப்பும் பக்திச் சுவையும் மிக்கதாகும். இராமன் காட்டிற்குச் சென்ற காட்சியைத் "தையல் தன் கற்பும் தன் தகவும் தம்பியும் மையறு கருணையும் உணர்வும் வாய்' மையும் செய்யதன் வில்லுமே சேமமாகக் கொண்டு ஐயனும் போயினான் அல்லின் நாப்ப ணே !” என்று கம்பன் மிக அழகாகத் தன்தகவும் தம்பியும் துணையாகக் கொண்டு ஐயன் வனம் சென்றதாகக் குறிப்பிடுவது இணையற்ற சொற்களாகும். இராமன் காட்டிற்குச் சென்று விட்டான். இராமனுடைய பிரிவைத் தாங்க முடியாமல் தசரதனுடைய ஆவி பிரிந்தது. தைலம் தடவி மன்னனுடைய உடலைப் பாதுகாத்து வைத்து கேகய நாட்டில் இருந்த பரதனுக்குச் செய்தி அனுப்பப் பட்டது. பரதனும் தன்னுடன் இருந்த சகோதரன் சத்ருக்கனனுடன் அயோத்தி வந்து சேர்ந்தான். அயோத்தி நகரம் துயரம் தோய்ந்து காணப் பட்டது. இருவகைத் துயரங்களால் மெளனம் கொண்டிருந்தது. இராமன் வனம் சென்றது கேட்டு பரதன் பெரும் துயரமடைந்தான். “எந்தையும் யாயும் எம்பி ரானும் எம்முனும் அந்த மில் பெருங் குணத்து இராமன் ஆதலால் வந்தனை யவன் கழல் வைத்த போது அலால் சிந்தை வெம் கொடுந்துயர் தீர்கலாது ” என்று பரதன் கூறுகிறான். இராமன் காட்டிற்குச் சென்ற காரணம், தசரதன் இறந்த விவரம் பற்றி விசாரித்த போது கைகேயி தன் மகனிடம் நடந்ததைக் கூறுகிறாள். “வாக்கினால் வரம் தரக் கொண்டு மைந்தனைப் போக்கினேன் வனத்திடைப், போக்கிப் பார் உனக்கு