பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் | ԵԵ இவ்வாறு சுமந்திரன் கூறியதைக் கேட்டவுடன் பரதனுக்குக் குகன் மீது அளவு கடந்த அன்பும் மதிப்பும் ஏற்படுகிறது. * மன்முன்னேதழி இக்கொண்ட மனக்கினிய துணைவனேல், என் முன்னே அவன் காண்பென் யானே சென்று” என எழுந்தான். எனது மன்னனான இராமனுடைய மனதுக்கினிய துணைவன் என்றால் நானே முன் சென்று அவனைக் காண்பேன் என்று பரதன் எழுகிறான். அத்தகைய முழு மரியாதைக் குகனுக்குக் கொடுக்கவேண்டுமென்று பரதன் உணர்கிறான் என்பதைக் கம்பன் எடுத்துக்காட்டுகிறார். குகன் எதிர்க்கரையில் நின்ற பரதனைக் கூர்ந்து நோக்கினான். அவன் நிலை கண்டுத் திடுக் கிட்டான். பரதன் எவ்வாறு இருந்தனென்பதைக் கம்பன் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார். பரதன மரிரவுரி தரித்திருந்தான். தவ வேடம் கொண்டிருந்தான். அவனுடைய உடம்பெல்லாம் துTசு படிந்திருந்தது. ஒளியிழந்த சந்திரனைப் போல அவனுடைய முகம் இருந்தது. சோகமே உருவாகநின்றான். இராமன் காட்டுக்குச் சென்று விட்டான், மரவுரி தரித்து வனம் சென்று விட்டான் என்று கேட்ட மாத்திரத்திர்த்திலிருந்தே இராமனைப் போலவே தானும் தவ வேடம் கொண்டவன். கண் கலங்கி ஆழ்ந்த துயரத்துடன் நின்று கொண்டிருந்த பரதனைத் தொலைவில் கண்டவுடனேயே குகனுடைய மனநிலை மாறிவிட்டது. இந்தக் காட்சியை மிக அழகாக்க் கம்பன் சித்தரித்துக் காட்டுகிறார். “வற்கலையின் உடையானை, மாசடைந்த மெய்யானை நற்கலையில் மதியென்ன நகையிழந்த முகத்தானைக் கற்கனியக் கணிகின்ற துயரானைக் கண்ணுற்றான்” என்று குகன் கண்ட காட்சியைக் கம்பன் கூறுகிறார். இந்தக் காட்சியைக் கண்ணுற்ற குகனுக்கு நெஞ்சு நெகிழ்கிறது. கையிலிருந்து வில் நழுவுகிறது. மனம் விம்பிக் கூறுகிறான். “நம்பியும் என் நாயகனைஒக்கின்றான் அயன் நின்றான்