பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் |08 குகனை உடன் பிறந்தோனாகக் கொண்ட இரிாமனது உள்ளம் போலப் பரதனுடைய உள்ளமும் பண்பட்டிருந்ததீதைக் கம்பன் மிகச் சிறப்பாக இங்கு எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். பரதன் இராமன் சந்திப்பு இராமகாதையில் பரதன் - இராமன் சந்திப்பு ஒரு முக்கிய கட்டமாக, சிறப்பு மிக்க புனிதமான நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பாரத நாட்டின் பல பகுதிகளிலும் இராம காதையின் பரதன்-இராமன் சந்திப்பை மிகவும், முக்கியமாகக் கருதி விழாக்கள் கூட எடுக்கிறார்கள். இராமன் தந்தை சொல் காக்கவும், அறத்தின் வழி நின்று வாய்மை காத்து நாடு நீங்கிக் காடு வந்த சேர்ந்தான். இதையறிந்த பரதன் மனம் பதறி இராமனைத் தேடி வருகிறான். இராமாயணக் கதையில் பரதன் மிக முக்கியமான சிறந்த தெய்விகப் பாத்திரங்களில் ஒன்றாகக் கம்பன் சித்தரித்துக் காட்டுவதைக் காண்கிறோம். அயோத்தியின் நான்கு சகோதரர்களில் இராமனுக்கு அடுத்தவன் பரதன். அவன் இராமனைக் காட்டிலும் சிறந்தவனாகக் கூறப்பட்டிருக்கிறான். கல்வியும், இளமையும்,கணக்கில்லா ஆற்றலும், வில்வினை உரிமையும், அழகும், வீரமும்,எல்லையில் குணங்களும் எய்தியவன் பரதன் என்று போற்றப்படுகிறான். <ئے ہے ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனேயாள நீ போய் தாழிரும் சடைகள் தாங்கி, தவம் ற்கொண்டு, கானம் நண்ணி, புண்ணியத்துறைகள் ஆ ரண்டாண்டில் வா என்று இயம்பினன் அரசன் எனக் கையிே கூறிய போது இராமனுடைய முகம் மலர்ச்சியடைந்ததே தவிர வாட்டம் கொள்ளவில்லை, மாற்றம் கொள்ளவில்லை, தாய் வேற்றுமை பாராட்டாத இராமன் கையேயியிடம் என் பின்னவன் பெற்ற செல்வம்.அடியனேன் பெற்றதன்றோ என்று கூறிக்கானம் போவதற்கு விடையும் பெற்றுக் கொண்டான். கோசலையிடம் இராமன் விடை பெற்றுக் கொள்ளக் சென்றபோது அவரிடம் “நின் காதல் திருமகன், பங்கமில் குணத்து