பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

эндией -2c5 есретили итоги — э. бойотеей 18] ஒருவனுக்கு மெய்யான கோபம் ஏற்பட்டால், கடுஞ்சினம் கொண்டால், கண்களில் நெருப்புப் பொறி பறக்கும். ரோமம் சிலிர்க்கும், உடம்பு வியர்க்கும், மூச்சுக்ககாற்றின் சூடு ஏறும். கை கால்களின் படபடப்பு அதிகமாகும். அனைத்து அவயவங்களும் நிலை கொள்ளாது துடிக்கும், நெஞ்சுத் துடிப்பின் வேகம் கூடும், நாடித்துடிப்பும் அதிகரிக்கும், இவ்வாறாக இலக்குவனின் சீற்றம் ஆதி சேடனின் சீற்றத்திற்கு ஒப்பிடப்படுகிறது. இத்தனை கோபம் ஏற்பட்டாலும் இலக்குவனை இந்தவிடத்தில் அண்ணல் பெரியோன் என்று சிறப்புறக் கம்பன் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கதாகும். இலக்குவன் நல்ல உள்ளம் கொண்டவன். சூதுவாது அறியாதவன், வெள்ளை மனம் கொண்டவன், தன்னலம் கருதாதவன், அண்ணன் இராமன் மீது அளவு கடந்த பக்தியும் மரியாதையும் கொண்டவன். இராமபிரானுக்காகத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவன். தன் அண்ணனுக்கு யார் தீங்கு நினைத்தாலும், யார் கடமை தவறினாலும் நீதிக்கும் நேர்மைக்கும் யார் புறம்பாகச் சென்றாலும் இலக்குவனுக்கு அளவு கடந்த சீற்றம் ஏற்படுகிறது என்பதை இராமகாதையில் பல இடங்களிலும் காண்கிறோம். இராமன் அமைதியும் அடக்கமும் அருளும் நிதானமும் கொண்டவன். இலக்குவன் வேகமும் சீற்றமும் கொண்டவன். ஆயினும் அவன் அண்ணனுக்கு அடக்கம். இராமன் மீது துரும்பும் பட அனுமதிக்க மாட்டான். இராமனுக்குச் சிறு தீங்கு நேர்வதையும் பொறுக்க மாட்டான். இராமனை நிழல் போல் பின் தொடர்ந்து செல்பவன். இந்த இரு சகோதரர்களின் சேர்மானம் இராமாயணக் கதையில் மிகவும் சிறப்புத்தன்மை கொண்டதாகும். அதைக் கம்பன் கையாளும் விதமும் நமக்கு அறிவூட்டுவதும் ஆதர்ச மூட்டுவதுமாகும். இராமனுக்கு அரசுப் பட்டம் இல்லையென்றவுடன் இலக்குவனுக்குக் கடும் சீற்றம் ஏற்படுகிறது. அதற்குக் காரணம் யாராக விருந்தாலும் அது தந்தையா, தாயா, மற்றொரு அண்ணனா என்று யாராயிருந்தாலும் சரி அவர்கள் மீது பாய்வதற்கு இலக்குவன் தயாராகவிருந்தான்.