பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ыйшей —әсъ әсрәтиий иттів»ә, — зі збәйәтәәй. 183 என்றும் “வலக்கார் முகம் என் கையதாக அவ்வானுளோரும் விலக்கார், அவர் வந்து விலக்கினும் என்கை வாளிக்கு இலக்கா எரிவித்து, உலகு ஏழி னொடு ஏழும் மன்னர் குலக்காவலும் இன்று உனக்கு யான் தரக்கோடி’ என்றும் பொரிந்து தள்ளினான். உண்மையைச் சிதைத்து, முறையைக் குறை செய்து, உள்ளம் கருமையாகி, கபடமாக வஞ்சகமாகச் சூழ்ச்சி செய்த கைகேயியின் கண்ணுக்கு எதிராகவே உனக்கு முடிசூட்டுவதற்குத் தடையாகத் தேவர்களே வந்தாலும் அவர்களைப் பஞ்சை நெருப்பு பொசுக்குவதைப் போலப் பொசுக்கிச் சாம்பலாக்கி விடுவேன் என்றும், வெற்றியைத் தரும் வில் என் கையில் உள்ளது, வானுலகத்திலுள்ளவர்கள் கூட என்னைத் தடுக்க முடியாது, அப்படியே அவர்கள் வந்து தடுத்தாலும் அவர்களை எனது அம்புக்கு இரையாக்கி எரித்து விடுவேன், ஈரேழு பதினான்கு உலகங்களையும் அதன் ஆட்சி அதிகாரத்தையும் உனக்குக் கிடைக்கச் செய்வேன் என்றும் வீரம் கூறுகிறான். இலக்குவனை அமைதிப் படுத்துவதற்கு இராமன் பல கருத்துக்களையும் எடுத்துக் கூறிப் பேசுகிறான். “இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி வளையா வரும் நன்னெறி நின் அறிவு ஆகு மன்றே உளையா அறம் வற்றிட ஊழ்வ ழுவுற்ற சீற்றம், விளையாத நிலத்து உனக்கு எங்கண் விளைந்தது”? என்று கேட்டான். நீதி வளையாத நன்னெறி நிரம்பிய உனது அறிவிலே இப்படி அறம் வற்றிப்போன ஊழ்வழுவுற்ற சீற்றம் எப்படி வந்தது என்று இராமன் கேட்கிறான். இங்கு இராமன் மிகவும் அமைதியாகவும் பக்குவமாகவும் சீற்றம் கொண்டிருந்த இலக்குவனிடம் கேள்வி கேட்பதைப் போல அறிவுரை கூறுகிறான். நீதியும் நன்னெறியும் நிறைந்த அறிவைப் பெற்றிருக்கிறாய்