பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 188 என்று தாய்தந்தையர் மீது சலித்துக் கொள்ளலாமா? என இராமன் கேட்ட போது “எனக்குத் தாய் தந்தையாருமில்லை, எல்லாம் நீதான்” என்று இலக்குவன் பதில் கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். “நல்தாதையும் நீ, தனி நாயகன் நீ. வயிற்றில் பெற்றாயும் நீயே, பிறர் இல்லைப் பிறர்க்கு நல்கக் கற்றாய் இது காணுதி இன்று எனக்கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான்” என்று இலக்குவன் கூறுவதைக் கம்பன் இளம்பிறையணிந்த சிவ பெருமானுக்கு வரும் கோபத்தைப் போன்று கோபம் கொண்ட இலக்குவன் என்னும் பொருளைக் குறிக்கிறார். இதற்கு மேலும் விவாதத்தை வளர்க்காமல் மேற்கெரண்டு பேச்சிற்கு இடம் கொடுக்காமல் இராமன் உறுதியாக நின்று தனது முடிவான கருத்துக்களைக் கூறி இலக்குவனை அமைதிப் படுத்துகிறான். “வரம் பெற்றவள் தான் இவ்வையம் சரதம் உடையாள். அவள் என் தனித்தாதை செப்பப் பரதனுக்குப் பட்டத்தைப் பெற்றுள்ளாள், இனியான் படைக்கின்ற செல்வம் விரதம் தான், அதைக் காட்டிலும் நல்லதும் இனிய தாவதும் வேறு எதுவுமில்லை”, என்றும், மேலும், “இவ்வுலகத்தின் ஆட்சியை நன்னெறியில் வாழும் சகோதரர்களைப் போர் முனையில் வென்றோ, சான்றோர் புகழும் நமது தனித் தாதையை வாகை சூடியோ, ஈன்ற தாயை வென்றோ அடைய வேண்டிய அவசியம் எனக்கில்லை. இந்த வழியிலா நமது கோபத்தைத் தீர்த்துக் கொள்வது? அது சாத்தியமில்லை” என்றும் இராமன் உறுதிப்படக் கூறி விட்டான். “அத்துடன் நம்மை யெல்லாம், பெற்று, வளர்த்து, நல்ல அறமொழிகளை உரைத்துப் பேணிக்காத்து ஆளாக்கிய தந்தையின் சொல்லை மீறி நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது சரியென்றால் நீயும் என் சொல்லை மீறிச் செல்லலாம்” என்றும் இராமன் இலக்குவனுடைய கோபத்திற்கும் வாக்கு வாதத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தான். “வரதன் பகர்வான், வரம் பெற்றவள் தான் இவ்வையம் சரதம் உடையாள் அவள் என் தனித்தாதை செப்பப்