பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் |*M) நால் தெண்திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே ஏற்றம் தொடங்காக் கடலில் தணிவு எய்தி நின்றான்” என்று கம்பன் தனது கவிதை வரிகளில் குறிப்பிடுகிறார். இராமனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு-இலக்குவன் சீற்றதைத் தனித்துக் கொண்டான். ஆயினும் அவனுடைய மனம் முழுமையான ஆறுதலை அடைந்தது என்று கூற முடியாது. மீண்டும் அவனிடம் வெடிப்பும் உள்ளத்துடிப்பும் ஏற்படுகிறது. அவ்வப்போது அவனுடைய வார்த்தைகளில் அந்த வெடிப்பு வெளிப்படுவதைக் கதையில் பல இடங்களிலும் காண்கிறோம். இராமனுக்கும் இலக்குவனுக்கும் இடையில் நடைபெற்ற இந்த நீண்ட உரையாடல் மிகவும் மேலான நெறிமுறைகளை எடுத்துக் கூறுவதாகும். இந்த உரையாடலில் இராமன் சகோதர நல்லுறவுகளின் அறநெறி பற்றியும், தாய் தந்தையர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டிய அறநெறிகள் பற்றியும், மூத்தவர்களின் ஆணைக்கு உட்பட வேண்டிய கடமைகளைப் பற்றியும், பொது நெறிகளைப் பற்றியும் தெளிவு படுத்திக் கூறுகிறான். மீற முடியாத நெறிமுறைகளாக அவைகளை அறுதியிட்டுக் கூறுகிறான். சகோதரர்களுடன் வழக்காடிப் போர் புரிந்து முரண்பட்டு நின்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய அவசியமில்லை, தான் அதை நிச்சயமாகச் செய்ய முடியாது என்னும் கருத்தை வலுவாக இராமன் எடுத்துக் கூறுவதைக் கம்பன் தனது கவிதை வரிகளில் மிக அழகாக வடித்துக் கூறுகிறார். சகோதர உறவு அறத்தினடிப்படையில் அமைய வேண்டுமென்னும் உண்மையை இங்கு இராமன் தெளிவு பட எடுத்துக் கூறுவதைக் கம்பன் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார். இராமனுக்கும் பரதனுக்கும் நடை பெறும் விவாதமும் இராமனுக்கும் இலக்குவனுக்கும் நடைபெறும் விவாதமும் மிகச் சிறந்த அறநெறி இலக்கியமாக அரசியல் சிறப்பு மிக்க அறமாக, வாழ்க்கை நெறி இலக்கியமாக மற்றும் வழி காட்டுதல் நெறி இலக்கியமாகக் கம்பன் தொகுத்துக் கூறியுள்ளது மிகவும் சிறப்பானதாகும். இராமனும் இலக்குவனும் சுமித்திரையிடம் செல்கிறார்கள். அவள் (கலங்கி வருந்துகிறாள்.