பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் T32Q5 சமுதாயப்-பார்வை-அ. சீனிவாசன் |9|| "சோர்வாளை ஒடித்தொழுது ஏத்தினன் துன்பம் என்னும் ஈர்வாளை வாங்க மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் போர்வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்க கில்லேன், கார்வான் நெடும்கான் இறை கண்டு பின் மீள்வான்” என்றும், “கான் புக்கிடினும் கடல் புக்கிடினும் கலிப்பேர் வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி யான் புக்கதுஒக்கும் என்னை யார் நலிகிற்கும் ஈட்டார் ஊன்புக்கு, உயிர்புக்கு, உணர்புஉக்கு உலையற்க” என்றும் பலவாறு கூறி, தந்தை சொல்லைப் பொய்யாக்க லாகாது என்றும், நான் எங்கு சென்றாலும் கான் புகுந்தாலும் கடல் புகுந்தாலும் வான் புகுந்தாலும் எல்லாமே எனக்கு அயோத்திதான் என்றும் தாய் சமித்திரைக்கு இராமன் ஆறுதல் கூறினான். சுமித்திரை, இலக்குவனிடம், "மகனே இவன் பின்செல், தம்பியெனும் படியன்று, அடியாரினும் ஏவல் செய்தி, மன்னும் நகர்க்கே இவன் வந்திடில்வா, அதன்றேல் முன்னம் முடி’ என்று கூறி வாழ்த்தி அனுப்பினாள். அவளும் சகோதர பாசத்தை வலியுறுத்தி இராமனுக்குப் பக்தியுடன் தொண்டு செய்து கொண்டு அவனுடன் செல்லும்படி) கூறுகிறாள். அதன் பின்னர் இராமன் இலக்குவனிடம் அன்னையர்களும் அரசனும் முன்போல் இல்லாமல் கடுமையான துயரத்தில் மூழ்கியுள்ளார்கள். என்னையும் பிரிகிறார்கள். நீயாவது இங்கிருந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிரு, நான் காடு சென்று வருகிறேன் என்று கூறுகிறான். “அன்னையர் அனைவரும் ஆழிவேந்தனும் முன்னையரல்லர் வெம்துயரின் மூழ்கினார்