பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 194 இத்தனை கொடுமைகளுக்கும் காரணமான, முன் ஒன்று கூறி பின் அதை மறுத்த தசரதனை அரசன் என்று கூற இலக்குவனுக்கு விருப்பமில்லை. காய்கனி கந்த மூலாதிகளை உண்டு வாழ நாங்கள் கானகம் செல்கிறோம். அவர்கள் நன்றாக உண்டு களித்து உறங்கி வானுலகு செல்லட்டும். பரதன் இராமனுடன் பிறக்கவில்லை, என்னுடனும் பிறக்கவில்லை, சத்துருக்கனனும் என்னுடன் பிறக்கவில்லை. எங்கள் வலிமைதான் எங்களுக்குத் துணையாக வருகிறது என்று பரதனிடம் கூறு” என்று இலக்குவன் தனது உள்ளத்தில் தோன்றிய ஒருவகை வெறுப்புடன் கூறினான். ‘மின்னுடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என் மன்னுடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான் தன்னுடன் பிறந்திலென் தம்பி முன்னலென் என்னுடன் பிறந்த யான் வலியன் என்றியால்” என்று கூறினான் இலக்குவன். இலக்குவன் கூறிய அந்தச்சுடு சொற்களைக் கேட்டு இராமன் மனம் வருந்தி, “ஆரியன் இளவலை நோக்கி ஐய இச் சீரிய அல்லன செப்பல் என்ற பின் பாரிடை வணங்கினன், பரியும் நெஞ்சினன்” என்றவாறு அதன் பின்னர் இலக்குவன் அமைதியடைந்து அண்ணனை வணங்கி நின்றான். சுமந்திரனை அனுப்பி விட்டு சீதையும் இராமனும், இலக்குவனும் நள்ளிரவிலேயே காட்டிற்குப் புறப்பட்டனர் என்று கம்பன் கூறுகிறார். மிகவும் உருக்கமான இலக்கியச் சொற்களில் கம்பன் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதில் தனியான அழகும் பொருளும் பொதிந்திருக்கிறது. "தையல் தன் கற்பும் தன் தகவும் தம்பியும் மையறு கருணையும் உணர்வும் வாய்மையும்