பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப்-பார்வை-அ.-சீனிவாசன் 205 போது, இலக்குவன் சற்றுமணம் கசந்து இராமனிடம் இந்த சுக்கிரீவன் தனது அண்ணன் கொல்லப்படுவதற்குக் காரணமாக எழுந்துள்ளானே இவன் நம்மிடம் தஞ்சமாக வந்துள்ளானே என்று சந்தேகப் பார்வையில் கேள்வியை எழுப்புகிறான். இந்த சுக்கிரீவனை நாம் நமது வேலைகளுக்கு நம்ப முடியுமா என்பது இலக்குவனுடைய சந்தேகம். அப்போது இராமன் உலகில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் எல்லோருமே ஒத்துப்போயிருப்பதானால் பரதன் எப்படி உயர்வான உத்தமனாவான் என்றும் இங்கு விலங்குகளின் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசலாமா என்றும் இலக்குவனுடைய கேள்விக்குப் பதில் கூறுகிறான். - + يي چى وص متعہ تخریہ , ; * ל", קיי רי そ . .அறததாறு அழுங்கத = ص معجد يده من حي ? ? چاہئے... தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்விது அன்றால், மாற்றான் எனத்தம் முனைக் கொல்லிய வந்து நின்றான்; வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என்? வீர” என்றான். இவ்வாறு இலக்குவன் சந்தேகக்கேள்வியை எழுப்ப இராமன் கூறுகிறான். "அத்தா! இது கேள் என ஆரியன் கூறுவான்; இப் பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ! எத்ததாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ!” என்று இராமன் கூறியதைக் கம்பன் மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறார். இங்கு பரதனின் சகோதர பாசத்தின் உயர்வு எடுத்துக் காட்டப்படுகிறது. இன்னும் வாலியின் வாயால் “வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் துயவன் மைந்தனே, நீ பரதன் முன் தோன்றினாயே” என்றும், “பெற்ற தாதை பூட்டிய செல்வம், ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து நாட்டொரு கருமம் செய்தாய்” எம்பிக்கு அரசை நல்கிக் காட்டொரு கர்மம் செய்தாய் என்றும் இராமனுடைய குறைபட்டlசெயலைக் கம்பனுடைய கவிதை வரிகள் சுட்டிக் காட்டுகின்றன.