பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால்” என்று கம்பன் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இராவணன் போர்க்கோலம் கொண்டான். அவனை இலக்குவன் முதலில் எதிர்கொண்டான். அவனுடைய கணைகளையெல்லாம் இலக்குவன் தடுத்தான், அழித்தான். இலக்குவனுக் கருகிலிருந்த வீடணனைக் கண்ட இராவணன் அவன் மீது கடுங்கோபம் கொண்டு, அவனை முதலில் கொல்லக் கருதி ஒரு சக்தி மிக்க வேற்படையை அவன் மீது ஏவினான். அந்த வலுவான வேற்படையை இலக்குவன் தன் மார்பில் தாங்கிக் கீழே சாய்ந்தான். ‘மின்னும் வேலினை விண்ணவர் கண் புடைத்து இரங்கப் பொன்னின் மார்பிடை ஏற்றனன் முதுகிடைப் போக” என்று கம்பனுடைய கவிதை வரிகள் குறிப்பிடுகின்றன. மீண்டும் அனுமன் பாய்ந்து சென்று சஞ்சீவி மலையைக் கொண்டு அம்மருந்தால் இலக்குவன் உயிர் பெற்றான். தம்மைச் சார்ந்தோருக்கும் துன்பம் வராமல் தடுக்க இரவிதன் குலத்துக்கேற்ற வள்ளல் தன்மை கொண்டிருக்கிறாய். உயிரையும் தொடுத்துமீண்டாய் என்று இலக்குவனுடைய தியாகத்தின் பெற்றுமையை இராமன் புகழ்ந்தான். இராம இராவணப் போரைக் கம்பன் மிக அழகாக மிக உயர்ந்த இலக்கியச் செம்மையுடன் எடுத்து விரித்துக் கூறியுள்ளார். இந்த மிகப் பெரிய போரில் இராவணன், கும்பகருணன், அதிகாயன், இன்னும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்திரசித்தன் ஆகிய மாவீரர்கள் காட்டிய வீரமும் சாகசங்களும், அவர்களை எதிர்த்து இராமன், அனுமன், சுக்கிரீவன், அங்கதன், விடணன் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இலக்குவன் காட்டிய வீரம், தீரம், தியாகம் நிறைந்த சாதனைகள், வெற்றிகள் ஆகியவை கம்பன் காட்டியுள்ள அற்புதமான கவிதைகளில் ஒளி வீசுகின்றன. உலக மகா இலக்கியங்களுக்கீடாக அவை உயர்ந்து மலர்ந்து பாரி ஜாத