பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மராத்தி, குஜராத்தி, வங்காளி, ஒரியா, பஞ்சாபி, மைதிலி, உருது, மணிபூரி, அஸ்ஸாமி மற்றும் இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் இராமாயணக் கதை மிகவும் பிரபலமாகும்.

தமிழில் உள்ள கம்பனுடைய இராமாவதார மகாகாவியம் (கம்ப ராமாயணம்) வால்மீகிக்கு அடுத்த படியாக அதற்கு இணையீடாக இடம் பெற்றிருப்பதாக அறிஞர்கள் பலரும் உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள். எனவே கம்பனுடைய இராமாயணத்தை இந்திய இலக்கியச் செல்வத்தின் ஒரு சிறந்த பகுதியாக, தமிழ் இலக்கியச் செல்வத்தின் தலை சிறந்த பகுதியாக நாம் படித்துப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதன் சிறப்புகளை வீதிதோறும் ஊர் தோறும் நாடெங்கும், இதர மொழிப்பகுதிகளிலும் உலகெங்கும் பரப்ப நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

இராமாயணக் கதையின் பலவேறு பரிமாணங்களும் அவை பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்-

இராமாயணக் கதையைப் பற்றியும் அதன் மூலத்தைப் பற்றியும், அதன் தோற்றத்தைப் பற்றியும், அதன் கதை, கதைப்போக்கு, கதா பாத்திங்கள், பாத்திரப்படைப்புகள், பாத்திரச் சிறப்புகள், அவைகளின் தத்துவ ஞான உள்ளடக்கம், இலக்கியச் சிறப்புகள், ஆன்மீக வளம், தெய்வீகத் தன்மை, மக்களின் உள்ளங்களில் இடம் பெற்றுள்ளமகிமை, முதலியவை பற்றியும் ஏராளமான பல ஆய்வுகளும் கருத்துக்களும் வெளி வந்துள்ளன. சமூக அறிவியல் அடிப்படையிலான பல கருத்துக்களும் ஆய்வுகளும் வெளி வந்துள்ளன.

இராமாயணக் கதையின் மூலத்தைப் பற்றியும் அதன் தோற்றத்தைப் பற்றியும் பலரும் பலவகை ஆய்வுகளைச் செய்துள்ளார்கள். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் சங்காலியா “Ramayana a Myth or Reality” (இராமாயணம் ஒரு கட்டுக்கதையா அல்லது உண்மை நிகழ்ச்சியா?) என்னும் நூலின் மூலம் ஒரு ஆய்வு செய்து அது ஒரு கட்டுக்கதை என்னும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

மத்திய பாரதத்தில் மலை காடுகளில் பல பிரிவு பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்தப் பழங்குடி மக்களில் ஒரு