பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 228 வந்துள்ளான் என்று எனக்குத் தகவல்’ என்று கூறுகிறாள். அதற்கு வாலி நகைத்து உனக்கு இராமனைப் பற்றித் தெரியாது. அவன் உத்தமன், அவன் தனது தம்பிக்கு அரச அதிகாரத்தைக் கொடுத்து விட்டுக் காட்டுக்கு வந்தவன். அவன் தனது சகோதரர்களுக் -கிடையில் வேறுபாடு காணாதவன்” என்று இராமனுடைய சகோதர மேன்மை குணத்தைப் பாராட்டிப் பேசுகிறான். அதனால் எனத்கும் எனது தம்பிக்குமுள்ள விவகாரத்தில் இராமன் தலுை ாட்டான் என்று கூறுகிறான். இராமன் தங்களது விவரிகிாரத்தில் தலையிட மாட்டான் என்னும் நம்பிக்கை வாலிக்கு ஏற்பட்டிருக்கிறது. “தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இம்பரில் இலது என எண்ணி ஏய்ந்தவன் எம்பியும் நானும் உற்று எதிர்ந்த போரிடை அம்பிடை தொடுக்குமோ? அருளின் அழியான்” என்று இராமனுடைய பண்பின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு வாலி பேசுகிறான். “நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே, நான் வெற்றியுடன் திரும்புகிறேன்” என்று தாரையிடம் கூறி விட்டுப் போருக்கு எழுகிறான். சுக்கிரீவன் மீது போர் செய்ய ஆவேசத்தோடு கிளம்புகிறான். இந்த சமயத்தில் இராமனுக்கும் இலக்குவனுக்குமிடையில் ஒரு பொருள் மிக்க உரையாடல் நடைபெறுகிறது. சகோதார்களுக்குள் சண்டை செய்வது என்பது இலக்குவனுக்கு உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. எனவே சுக்கிரீவன் மீது சந்தேகத்தைக் கிளப்புகிறான். தன் உடன் பிறந்தானைக் கொல்வதற்கே ஏற்பாடு செய்துள்ளானே, அறநெறி கெடும்படி நடக்கின்றானே, தன் உடன் பிறந்தானையே மாற்றானாகக் கருதிக் கொல்ல முனைந்தவன் வேற்றானாக உள்ள நம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளானே’ என்றெல்லாம் சந்தேகங்களைக் கிளப்புகிறான். அப்போது இராமன் “விலங்குகளின் ஒழுங்கினைப் பற்றிப் பேச முடியாது” என்றும் "எல்லோரும் பரதன் அல்ல” வென்றும் உலக நடப்பைக் கூறித் தனது செய்கையையும் சுக்கிரீவனுடைய செய்கையையும் நியாயப் படுத்துகிறான்.