பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zubucăr -205 zgozwung umfowe2 - 9. stofkonzeż: H 235 வழியில் செல்வதே அறநெறியாகும். அந்த அறநெறியின். பெருமையை உணர்ந்த நீ தவறிழைக்கலாமா? அந்தப் பிழையின் பலனை நீ அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஒரு பக்கக் காலைப் பிடித்து முதலை இழுக்க விலங்கு நிலையிலிருந்து யானையும் சங்கு சக்கரதாரியான கொற்றவனை நினைத்துக் கூவிய போது அந்த விலங்கும் மோட்சம் பெற்றது. தனது சிந்தனைகள் முழுவதையும் ஒரு வழியில் செலுத்தி சீதையின் துயரத்தைப் போக்க, அரக்கனை எதிர்த்துக் கடுமையான போரை நடத்திய கழுகரசனான எனது தந்தை சடாயுவும் வீடு பேறு பெற்றானல்லவா? “நல்லது கெட்டது என்று வேறுபாடு அறியாமல் நல்லறிவு இல்லாமல் வாழ்வதே விலங்கின் இயல்பாகும். நீ அறியாத நல்லது கெட்டது எதுவுமில்லை. நீ அறியாத நன்னெறி எதுவுமில்லையே? உன் வாய்மையே அதை உணர்த்துமே? என்று இராமன் கூறுகிறான். இங்கு வாலியின் நற்குணங்களையும் சிறப்புகளையும் சுட்டிக்காட்டி அவன் எல்லவற்றையும் அறிந்தே பிழை ಕ್ಲಿ; இராமன் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. அறியாமல் செய்த/பி காட்டிலும் அறிந்தே செய்யும் பிழை மன்னிக்க முடியாதfகுற்றமாகும் என்று சொல்லாமலே இராமன் இதைச் சுட்டிக் க்ாட்டுவதாக அமைந்துள்ளது. தக்கது இன்னது, தகாதது இன்னது என அற நூல்களுக்குப் பொருத்தமான முறையில் அறிந்து செயல் படாதவர், அவர்கள் உயர்வான மக்கள் குலத்தில் பிறந்திருந்தாலும் விலங்குகளைப் போன்றவர்களேயாகும். அதே சமயத்தில் மனுநெறி தவறாமல் அறநெறியின் படி நடந்தால் விலங்குகள் கூட தெய்வ நிலைக்கு உயர்ந்தவர்களாவார்கள் என்று இராமன் கூறுகிறான். இந்தக் கருத்து மிக உயர்வான சமுதாயக் கருத்தாகும். இந்தக் கருத்து பிறப்பால் சாதி வேற்றுமை குல வேற்றுமை காட்டுவதைத் தெளிவாக மறுக்கிறது. அறிநெறியில் நின்றால் தாழ்ந்தவர்களும் உயர்ந்தவர்களாவார்கள். இல்லாவிட்டால் உயர் குடியில் பிறந்த மனிதர்களும் விலங்குகளேயாவர். நன்னெறியில் நின்றால் விலங்குகளும் உயர் மக்களாவர் என்பதை கம்பன் தெளிவுப்படக் கூறுகிறார். இத்தகைய கருத்துக்களை ஆழ்வார்களின் பாசுரங்களிலும் காணலாம். “குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி