பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 236 நான் நான்குவர்ணங்களைச் சமைத்தேன்” என்று கீதாவாக்கியம் குறிப்பிடுகிறது. இராம பிரான் மேலும் கூறுகிறார். “காலனை உதைத்துத் தள்ளிய சிவபெருமான் பால் நீ பக்தி செலுத்திய காரணத்தால் திருமாலால் படைக்கப்பட்ட மண், நீர், தீ, காற்று ஆகிய நான்கு வலுவான இயற்கை சக்திகளின் வலிமையான ஆற்றலைப் பெற்றிருக்கிறாய். ஆயினும் எக்குலத்தார்க் காயினும் யாவர்க்காயினும், அவரவர்களுடைய செயல்களினால் தான் அவரவர்கள் மேன்மையோ, கீழ்மையோ அடைவார்கள் என்பதை நீ அறிந்திருந்தும் மனையின் மாட்சியை அழித்தாய்” என்று எடுத்துக் காட்டுகிறார். இராமாயணப் பெருங்கதையில் முக்கியமான கட்டங்களில் இப்படிப் பட்ட உரையாடல்கள், வாக்குவாதங்கள், மூலம் பல அறிய கருத்துக்களும், மக்களை நல்வழிப் படுத்துவதற்கான அறிநெறிகளும், வாழ்க்கை நெறிகளும் கூறப் படுவதைக் காண்கிறோம். இராமன் கூறிய அறநெறிக் கருத்துக் களையும் அறிவுரைகளையும் கேட்ட பின்னர், வாலியின் கேள்வி, பெருமை மிக்க பெரியோனே, நீ சொல்வதெல்லாம் நல்லதே, ஆயினும் போர்க்களத்தில் என்னை எதிர்த்து நேருக்கு நேராக நின்று போராடாமல் மறைந்து நின்று வில்லால் அடித்ததற்குக் காரணம் என்ன?” என்று வாலி கேட்கிறான். அதற்கு இராமன் பதில் கூறவில்லை. அக்கேள்விக்கு இராமன் பதில் கூறுவதைக் கம்பன் விரும்பவில்லை போலும். எனவே இலக்குவன் அதற்கு பதில் கூறுகிறான். “உன் தம்பி ஏற்கனவே முதலில் வந்து இராமனிடம் சரண் புகுந்து விட்டான். நீதி தவறிய உன்னை போரில் கொல்வேன் என்று இராமன் அவனுக்கு வாக்குறுதியும் கொடுத்து விட்டான். எனவே மறைந்து நின்று அம்பை எய்தான்” என்று இலக்குவன் கூறினான் என்பதைக் கம்பன் மிக நுட்பமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வாலிக்கு அறிவு ஒளி ஏற்படுகிறது. அறிவுத் தெளிவு கொள்கிறான். “தாய் என உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும் நீ என நின்ற நம்பி, நெறியினின் நோக்கும் நேர்மை