பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 240 இப்போது வாலிக்குத் தனது தம்பி மீது அளவற்ற பாசம் பொங்கிப் பெருகுகிறது. இராமனிடம் சில வேண்டுதல்களைச் செய்கிறான். “என் தம்பி ஏதாவது தவறு செய்து விட்டாலும் அவனை மன்னித்துவிடு. தீவினைகள் செய்து விட்டாலும் என்மீது ஏவியதைப் போல அவன் மீக உனது கணையைத் தொடுத்து விடாதே!” "பூவயல நறவும மாநதிப புந்தி வேறு உற்ற போழ்தில், தீவினை இயற்றுமேனும், எம்பி மேல் சீறி என் மேல், ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல்” என்று கேட்டுக் கொள்கிறான், மேலும், இன்னம் ஒன்று இரப்பது உன் பால், எம்பியை உம்பி மார்கள்/தன் முனைக் கொல்வித்தான் என்று இகழ்வரேல், தடுத்தி தக்கோய்/முன் முனே மொழிந்தாய் அன்றே இவன் குன்றி முடிப்பது ஐயா! பின் இவன் வினையின் செய்கை : AJA J J S T AA MMS 00 LSS S S (அதையும் பிழைக்களுடுஎன்றும் இராமனிை வாலி வேண்டுகிறான். “உன் தம்பிமார்கள் என் தம்பியைத் தன் அண்ணனைக் கொல்வித்தவன் என்று இகழ்ந்து ஏதாவது குற்றம் கூற முனைந்தால் அதை நீ தடுத்தல் வேண்டும். அவனுடைய தன்னிலையைக் காக்க வேண்டும். நீ முன் கூட்டியே என்னிடம் சொல்லியிருந்தால் அவனுடைய குறையை நான் தீர்த்திருப்பேன். நிகழ்ந்தெல்லாம் என் ஊழ்வினையின் செயல்தான்,” என்று வாலி கூறுகிறான். இல்லாவிட்டாலும், என்னிடம் கூறியிருந்தால் நான் மாய அரக்கனை எனது வாலில் கட்டி இழுத்துக் கொண்டு வந்திருப்பேன். இனி கடந்ததைச் சொல்லிப் பலன் இல்லை. எனக்கு பதில் அனுமன் இருக்கிறான். அவன் உனக்கு ஆவன செய்வான்” என்றும் கூறுகிறான். மேலும்,