பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ыйшей —әгсъ есделили илләгәси — =у. *afiәләайг 245 “இயக்கியர், அரக்கி மார்கள், நாகியர் எஞ்சில் விஞ்சை முயல்கறை இலாத திங்கள் முகத்தியர் முதலினோரை மயக்கற நாடி ஏகும் மாருதி மலையில் வைகும் கயக்கம்இல் துயிற்சிக்கும்ப கருணனைக் கண்ணில் கண்டான்.” கலக்கமில்லாத நிம்மதியான நெடுங்துக்கத்தைக் கொண்ட மலை போன்ற கும்பகருணனைக் கண்களில் கண்டான் அனுமன் என்று கம்பன் குறிப்பிடுகிறார். ஏழு யோசனை அகலமும் உயரமும் கொண்ட படுக்கை அறை, இந்திரனுடைய மணிமுடிகள் பதித்த மண்டபத்தில் இருளைப் போன்ற கருநிறமுடைய கும்பகருணன், ஆதிசேடனைப் போல பெருமூச்சு விட்டுக்கொண்டு துரங்கிக் கொண்டிருந்தான் என்று கம்பர் குறிப்பிடுகிறார். அனுமன் அடுத்தாற் போல வீடணனுடைய மாளிகையைக் கண்டான், “வேந்தர், வேதியோர், மேல் உளோர் கீழ் உளோர் விரும்பப் போந்த புண்ணியன் கண் அகல் கோயி லுள் புகுந்தான் η η என்று கம்பர் குறிப்பிடுகிறார். ‘பனிக்கு வேதிகைப்பவழத்தின் கூடத்துப் பசுந்தேன் துளிக்கும் கற்பப் பந்தரில், கருநிறத்தோர் பால் வெளித்து வைகுதல் அரிது என அவர் உருமேவி ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான் தனை உற்றான்,” என்னும் மிக அருமையான கருத்தைக் கொண்ட அழகிய பாடல் மூலம் தருமம் ஒளிந்து வாழ்வதைப் போல விடணன் வாழ்ந்ததாகக் கம்பன் குறிப்பிடுகிறார்.