பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыousa –oo» «сузылиш ыштоосу — Э. сооттолгоодо 249 மறுத்துக் கொண்டேயிருக்கிறாள். இதில் உனக்கு என்ன புகழ் இருக்கிறது,? “என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய் வன் தொழிலினாய் அறம் துறந்து சிறை வைத்தாய் அன்று ஒழிவது ஆயின அரக்கர் புகழ் ஐய புன்தொழி லினார் இசை பொறுத்தல் புலமைத்தோ?’! என்றைக்கு மற்றொருவனுடைய மனைவியை இரக்கமில்லாமல், வன் முறையில் அறத்தைத் துறந்து சிறை வைத்தாயோ அன்றே அரக்கர் குலத்தின் புகழ் போய் விட்டது. இழி தொழில்கள் மூலமாகப் புகழைத் தாங்க நினைத்தல் அறிவுடைமையாகாது. “ஆசில் பர தாரம் அவை அம் சிறையடைப்போம் மாசில் புகழ் காதல் உறுவேம் வளமை கூரப் பேசுவது மானம் இடை பேணுவது காமம் கூசுவது மானுடரை! நன்று நம் கொற்றம். ” குற்றமில்லாத பிறன் மனைவியைச் சிறை வைப்போம். மாசில்லாத புகழுடன் காதல் உறுவோம். பெருமை மிகும்படி மான அவமானம் பேசுவோம். ஆனால் காமத்தைப் பேணுவோம், மானிடரைக் கண்டு கூசுவோம். நமது ஆட்சி மிக நன்றாக இருக்கிறதே ! என்று இடித்துக் கூறுகிறான். இங்கு கும்பகருணனுடைய பேச்சில் முரண்பாடுகள் வெளிப்படுவதாகப் புலவர்கள் கூறுகிறார்கள். இங்கு பேசுவது, பேணுவது, கூசுவது ஆகியவை முரண்படுவதைக் காண்கிறோம். "சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய் மட்டு அவிழ் மலர்க் குழலினாளை இனி மன்னா விட்டிடுது மேல் எளியம் ஆதும் அவர் வெல்லப் பட்டிடுது மேல் அதுவும் நன்று பழி அன்றால்” “மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால் H கரன் படை படுத்து அவனை வென்று களை கட்டான்