பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 252 சொல்வதை முழுமையாகக் கேளுங்கள் என்று தொடங்கி பல நல்லுரைகளை வீடணன் கூறுகிறான். நம்முடைய அரசும் நகரமும் எளிந்தது. வானரம் சுட்டதால் அல்ல. சானகியின் கற்பினால் சுட்டதாகும். இன்று ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஒரு பெண் பொருட்டாகவே ஏற்பட்டுள்ளது. இந்த நெடுங்கடல் இலங்கை வேந்தனாகிய நீ முன்பு தவத்தால் பெற்றுள்ள செல்வம் எல்லாம் ஒரு மானிட மடந்தையால் நிறைவேறி விட்டதா? நீ பிரமதேவனை நோக்கித் தவம் செய்துப் பலன் பெற்ற காலத்தில் மனிதர் மூலம் அபாயம் ஏற்படக் கூடாது என்றும் வரம் கேட்கவில்லை. கயிலையை வெல்ல நீ தவம் இருந்த காலத்தில் நந்தியின் சாபம், ஒரு குரங்கினால் உனக்குத் தீமை விளையும் என்பதை வாலியின் மூலம் கண்டோம். முன்பு வேதவதி கொடுத்த சாபம் நான் உனக்கு நோய் என்று சபித்தாள் அந்த வேதவதிதான் இந்தச் சீதையாக வந்திருக்கிறாள், என்றெல்லாம் சுட்டிக் காட்டி, பின்னர் இராமருடைய பெருமைகளையும் எடுத்துக் கூறினான். முன்பு சம்பரனை வென்றுத் தனது தனுவின் வலிமையால் வானிலே புகுந்து எதிரிகளின் தலைகளைத் துண்டித்துத் தேவர்களுக்கு உதவிய மாமன்னன் தசரதனுடைய புதல்வர்கள்தான் இந்த இராமனும் இலக்குவனும். இவர்கள் ஒப்பில்லாதவர்கள், நமது தீவினையால் மனிதராகப் பிறந்து வந்துள்ளனர். இவர்கள் விஸ்வாமித்திரப் பெருமுனரிவனுடைய ஆசியைப் பெற்றவர்கள். அவர் மூலம் எல்லா வகையான சக்தி படைக்கருவிகளையும் பெற்றவர்கள். அகத்தியனுடைய ஆசியைப் பெற்றவர்கள். அவுணர்களோடு போர் செய்து வெற்றிப் பெற்றவர்கள். இவைகளையெல்லாம் அறிந்தவர்கள் உன்னிடம் சொல்வதற்கு அஞ்சி அந்த சானகி உனக்கு நஞ்சு என்பதைச் சொல்லாமல் உள்ளார்கள். அந்த இருவருக்கும் வானர வீரர்களும் தலைவர்களும் துணையாக இருக்கிறார்கள் என்றெல்லாம் இன்னும் பல விவரங்களையும் எடுத்துக் கூறி, "இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கை யும் எஞ்ச வசையும் கீழ்மையும் மீக் கொளக் கிளை யொடும் மடியாது அசைவில் கற்பின் அவ்வணங்கை விட்டு அருளுதி அதன் மேல்