பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப பாாவை - அ. சீனிவாசன் 261 அறவுரைகளை எடுத்துக் கூறுகிறான். “கற்புடைச் சானகி துயர் இனும் தவிர்ந்தது இல்லையோ, திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வி யை விட்டிலையோ” எனக் கேட்டான். “ஆனதோ வெம் சமர்? அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ? வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே?” "கிட்டியதோ செருக் கிளர் பொன் சீதையைச் சுட்டியதோ? முனம் சொன்ன சொற்களால் திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ? இது விதியின் வன்மையோ?” கும்பகருணன் கூறும் அறவுரைகள் மற்றும் நல்லுரைக -ளெல்லாம் தன்னலனுக்காகச் சொல்வதன்று. எல்லாம் தன் அண்ணன் சிறப்புடனும் பெருமையுடனும் இப்போதைய எல்லா நலன்களுடனும் நன்கு வாழ வேண்டும் என்பதற்காகத்தானே தவிர அவனுக்கு வேறு நோக்கமும் இல்லை சுய நலனுமில்லை. தன் அண்ணனுக்காக மிக்க மகிழ்ச்சியுடன் தன் உயிரையே அர்ப்பணிப்பதற்காக எப்போதும் தயாராக இருப்பவன். எனவே இராவணனுடைய இப்போதையப் பெருவாழ்வு அழிந்து விடக் கூடாதே என்னும் கவலையால்தான் நல்வழிக்கான கருத்துக்களைக் கூறுகிறான். பகை முற்றி விட்டதோ? இன்னும் அந்தக் கற்புடைச் சீதையின் துயர் தீரவில்லையோ? வானுலகிலும் இப்பூவுலகிலும் வளர்ந்து பரவியுள்ள பெரும்புகழ் போய் விட்டதோ? போதாத காலம் வந்து விட்டதோ? அந்தச் சீதை காரணமாகப் பெரும் போர் வந்து விட்டதோ? நான் முன்பு சொன்ன அறிவுரைகளைக் கேட்டு, திட்டிப் பாம்பின் கொடிய விடத்தைப் போன்ற கற்பின் செல்வியை இன்னும் விட்டு விடவில்லையோ? விதியின் வலிமை நம்மை ஆட்டிப் படைக்கிறதோ?”என்று கூறுகிறான்.