பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 264 அந்த மனிதர்கள் இரு வரையும் வணங்கி, அந்தக் குரங்குகளையும் கும்பிட்டுப் பிழைத்து வாழ வேண்டியது உனக்கும் உன் தம்பிக்குமே கடமை, நான் அதைச் செய்ய மாட்டேன், நீ இந்த இடத்தை விட்டு எழுந்து போ” என்று இராவணன் கோபமாகப் பேசி எனது தேர்ப்படையைக் கொண்டு வாருங்கள் எனது கொள்கைகளைப் பறை சாற்றுங்கள் என்னுடன் போர் புரிய வானத்தில் உள்ளவர்களும் இந்த மண்ணுலகில் உள்ளவர்களும் மற்றுமுள்ள அனைவரும் ஒன்று திரண்டு அந்த சிறுவர்களோடு சேர்ந்து கொண்டு வரட்டும்” என்று குரல் கொடுத்துக் கூறினான். உடனே கும்பகருணன் தன் அண்ணனை வணங்கி நான் இதுநாள் வரையிலும் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடு, என்னை வென்ற பின்னர்தான் யாரும் உன்னிடம் வர வேண்டும். பின்னர் யோசிப்பது பிழையாகும் என்று கருதியே அந்தப் பெண்ணை விட்டு விடும்படி கூறினேன். போர்க்களம் செல்ல உன்னிடம் விடை பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறி போர்களம் நோக்கிப் புறப்பட்டான். “என்னை வென்று உளர் எனில் இலங்கை காவல, ! உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால் பின்னை நின்று எண்ணுதல் பிழை அப்பெய் வளை தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே!” “இற்றை நாள் வரை முதல் யான் முன் செய்தன குற்றமும் உள. எனில் பொருத்தி கொற்றவ அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய ! பெற்றனன் விடை; எனப் பெயர்ந்து போயினான்” என்று கும்பகருணன் விடை பெற்றுக் கொண்டு போருக்குச் செல்வதைக் கம்பன் அழகு படக் கூறுகிறார். இந்த உரையாடலில் கும்பகருணனுடைய அளவு கடந்த சகோதர பாசத்தையும், அண்ணன் மீதுள்ள மரியாதையும், நன்மதிப்பும், அண்ணனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தியாக உணர்வையும் காண முடிகிறது. இராவணனுக்கும் தம்பி மீது மிகுந்த பாசம் உண்டு, கும்பகருணன் போர்க்களத்திற்குச் செல்லும் போது இராவணன்