பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 266 வீடணனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடன், இந்தக் கும்பகருணனை வீடணன் சென்று சந்தித்துப் பேசுவது நல்லது என்று சுக்கிரீவன் கூறுகிறான். இராமனும் அதற்கு சம்மதிக்கிறான். வீடணன் இராமனுடைய அனுமதியைப் பெற்றுக் கும்பகன்னனிடம் செல்கிறான். அண்ணனை சந்திக்கிறான். இங்கு கும்பகருணனுக்கும் விடணனுக்குமிடையில் ஒரு அருமையான உரையாடல் நடைபெறுகிறது. இந்த அற்புதமான உரையாடல் இராமாயணப் பெருங்கதையில் நாம் காணும் சிறந்த சில உரையாடல்களில் ஒன்றாகும். சகோதர பாசம், அன்பு, இரக்கம், பரிவு, பாசம், அறவுணர்வு, நீதி, நேர்மை, வீரம், செஞ்சோற்றுக் கடன், குல தருமம், குலமானம், மாற்றானுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாத சுயகவுரவம் முதலியன பற்றிய பல கருத்துக்களும் மிகவும் சிறப்பாக இங்கு இடம் பெற்றிருக்கின்றன. கம்பனுடைய சிறந்த இலக்கிய மணம் இதில் மிக நன்றாகக் காணப் படுகிறது. இப்பகுதியில் உள்ள கவிதைகள் மீண்டும் மீண்டும் படித்து இன்புறத் தக்கன. இலங்கை சகோதரர்களின் வரலாற்றில் ஒரு ஒளி வீசும் மாணிக்கக் கற்களாக அவை அமைந்துள்ளன. தன்னருகில் வந்த வீடணனைக் கும்பகருணன் உச்சி மோந்து கட்டி அனைத்து முத்தமிட்டு, கண்ணிர் பொங்க 'நீ ஒருவனாவது பிழைத்தாய் என்று மகிழ்ச்சியுடன் இருந்தேன் எனது எண்ணமெல்லாம் சிதறும்படி நீ மீண்டும் தெளிவில்லாதவன் போலத் தனியாக இப்படி ஏன் வந்தாய்” எனக் கேட்டான். “முந்தி வந்து இறைஞ்சினானை மோந்து உயிர் மூழ்கப் புல்லி உய்ந்தனை ஒருவன் போனாய் எனமணம் உவக்கின்றேன் என் சிந்தனை முழுதும் சிந்தத் தெளிவிலார் போல மீள வந்தது என் தனி யே? என்றான் மழையின் நீர் வழங்கும் கண்ணான்” என்றும், மேலும் “அவயம் நீ பெற்ற வாறும் அமரரும் பெருதல் ஆற்றா