பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 274 உலைவு இலாத் தருமம் பூண்டாய் உலகுளத னையும உளளாய தலைவன் நீ உலகுக்கெல்லாம் உனக்கு அது தக்கதே ஆல் புலையுறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதே ஆல்” படைப்புக் கடவுளான பிரமதேவன் கொடுத்தி,திங்கில்லாத பல வரங்கள் காரணமாக நீ உறுதியான தரும நிலையைப் பூண்டுள்ளாய். நீ உலகுக்கெல்லாம் தலைவனாகி விட்டாய். எனவே நீ இராமன் பக்கம் இருப்பது சரிதான். ஆனால் நான் போர்க்களத்தில் உயிர்த் தியாகம் செய்வதே எனக்குப் புகழைக் கொடுக்கும் என்று கூறுகிறான். “கருத்திலா இறைவன், தீமை கருதினால் அதனைக் காத்துத் திருத்தலாம் ஆகில் அன்றே திருத்தலாம்; தீராது ஆயின் பொருத்துறு பொருள் உண்டாமோ! பொரு தொழிற்கு உரியராகி ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா! ” கருத்தில்லாத ஒரு தலைவன் தீமை கருதினால் முடிந்த வரை முயற்சித்து அதைத் திருத்தலாம். அவ்வாறு முடியாமல் போனால் பொறுத்திருக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. பொறுமைக்கு இலக்கணமாகி முன்னர் சாதலே உண்டவர்க்கு உரியதாகும்” என்று சாதாரண மனித நியாயத்தை எடுத்துக் கூறுகிறான். “தும்பி அம் தொடையல் வீரன் சுடுகணை துரப்பச் சுற்றும் வெம்பு வெம்சேனையோடும் வேறுள கிளைஞரோடும் உம்பரும் பிறரும் காண ஒருவன் மூவுலகை ஆண்டான்