பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйлейт –“РФ5 «Qдаятшй штіегзи — әу. «затылғзат .כ"וש தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண் மேல்” “மிகப் பெரிய படையோடும் சேனைகளோடும் கிளைகளோடும் தேவர்களும் பிறரும் காண மூவுலகையும் ஆண்ட ஒரு மாவீரன் தம்பியும் இன்றித் தனியாக மண்மீது மாண்டு கிடக்கலாமா?” என்று கம்பீரமாக வாழ்ந்த தன் அண்ணன் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டு பேசுகிறான். “செம்பிட்டுச் செய்த இஞ்சித்திருநகர்ச் செல்வம் தேறி வம்பிட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி அம்பிட்டுத்துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய, கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன்” “திருநகர்ச் செல்வத்திற்காக, அதை நிலையாகக் கருதி, நமது உயிர்களை வாங்கிக் கொண்டிருக்கும் பகையை வாழ்த்திக் கொண்டு அம்பு பட்டுத் தொளை கொண்ட புண்ணுடைய நெஞ்சோடு நான் கும்பிட்டுக் குறுகி வாழ மாட்டேன், அதற்கு பதில் கூற்றுக்கு இறையாவேன்” என்று தன்மானமும் போர் களத்தின் வீரத்தையும் பேசுகிறான். போர்க் களத்தில் சந்தித்த பிறகு அதில் குழப்பத்திற்கு அவசியமில்லை என்னும் சுத்த வீரத்தன்மையைக் கும்பகருணன் வெளிப்படுத்துகிறான். “தாழ்க்கிற்பாய் அல்லை, என் சொல் தலைக் கொளத்தக்கது என்று கேட்கிற்பாய் ஆயின் எய்தி அவரொடும் -- கேழிஇய நட்பை வேட்கிற்பாய்; இனி; ஒர் மாற்றம் விளம்பி னால் விளைவுண்டு என்று சூழ்நிற்பாய் அல்லை, யாரும் தொழ நிற்பாய்; என்ன சொன்னான்’