பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை- அ. சீனிவாசன் Z/o அவனை மற்போரில் வீழ்த்தித் துக்கிக் கொண்டு ஓடினான். அந்த நேரத்தில் இராமன் தலையிட்டுச் சுக்கிரீவனைக் காப்பாற்றிக் கும்பகருணனை எதிர்த்தான். இராமனுக்கும் கும்பகருணனுக்கும் போர் உக்கிரமாக நடந்தது. கும்பகருணன் இணையற்ற வீரனாகக் காட்சியளித்தான். அவனுடைய படைக்கலன்கள் அனைத்தையும் இராமன் அழித்தான். கும்பகருணன் தன்னந்தனியாக நின்றான். வாள் கொண்டும் சூல் கொண்டும் அவன் இராமனை எதிர்த்தான். இராமன் கும்பகருணனுடைய இரு கரங்களையும் வெட்டினான். மூக்கை அறுத்தான். கரங்களை இழந்த பின்னரும் கால்களால் போராடினான். இராமன் அவனுடைய இரு கால்களையும் வெட்டி விட்டான். கைகளையும், மூக்கையும், கால்களையும் இழந்த கும்பகருணன் நெஞ்சால் தவழ்ந்து கொண்டு போரிட்டான். அவனுடைய போரைக் கண்டு அனைவரும் அதிசயப் பட்டனர். ஆச்சரியப் பட்டனர். ஆயினும் கும்பகருணனால் தனது போரை நீண்ட நேரம் நீட்டிக்க முடியவில்லை. மிகுந்த சோர்வடைந்தான். அப்போது அவன் இராமனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தான். “புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாக துலைபுக்க மைக்கடம் கார் மதயானை வாள் வேந்தன் வழி வந்தீர் இக்கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய கைக்கடந்தான் உயிர் காக்கக் கடவீர் எங்களைக் கூட்டால்” ஒரு புறாவிற்காக தனது சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி வழியில் வந்தவன் நீ, எனவே உன்னிடம் அடைக்கலம் அடைந்துள்ள என் தம்பி வீடணனைக் கடைசி வரைக் காப்பாயாக அத்துடன் எனது வினைகளையும் தீர்த்து அருள் வாயாக என்று தொடங்கி இராமனிடம் வேண்டுகிறான். "நீதியால் வந்ததொரு நெடும் தரும நெறி யல்லால் சாதியால் வந்த சிறுநெறி அறியான் என் தம்பி