பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமப_ஒரு_சமுதாயப_பாவை- அ. சனவாசன 28-5 இந்திரசித்தனுடைய ஏச்சுக்களுக்கெல்லாம் பதிலளித்து வீடணன் பேசுகிறான். "அறம் துணையாவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் மறம் துணையாக மாயாப் பழியொடும் வாழ மாட்டேன் துறந்தி லேன் மெய்ம்மை, பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால் பிறந்தி லேன் இலங்கை வேந்தன் பின் அவன் பிழைத்த போதே !” “இலங்கை வேந்தன் இராவணன் அறம் துறந்து தவறும் தீமையும் செய்த போதே நான் அவனுக்குப் பின் பிறந்தவன் அல்ல என்று ஆகி விட்டேன் என்று உறுதியாகவும் மிகச் சரியாகவும் கூறியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். இந்திரசித்தன் போரில் தோற்றுப் போய் மாயமாக மறைந்து சென்று இலங்கை சேர்ந்தான். தந்தை இராவணனிடம் வீடணனைப் பற்றிக் கூறுகிறான். ‘சூழ்வினை மாயமெல்லாம் உம்பியே துடை க்கச் சுற்றி வேள்வியைச் சிதைய நூறி வெகுளியால் எழுந்து விங்கி ஆள்வினை ஆற்றல் தன்னால் அமர்த்தொழில் தொடங்கி ஆர்க்கும் தாழ்விலாப்படைகள் மூன்றும் தொடுத்தனென் தடுத்து விட்டான்” என்று தனது போர்ச் சாகசங்களையெல்லாம் வீடணன் நாச வேலை செய்து முறியடித்து விட்டதைப் பற்றி/குறிப்பிடுகிறான். இராவணன் போருக்கெழுந்தான். வானரப்படைகளெல்லாம் நடுங்கின. இராவணன் தொடுத்த கணைகளையெல்லாம்