பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 284 இலக்குவன் அழித்தான். இலக்குவனுக்கருகில் வீடணன் இருந்தான். அந்த விடணன் மீது அடங்காத கோபம் கொண்டு இராவணன் அவனை நிச்சயமாகச் சாய்க்கும் படியான ஒரு வலுவான சக்தி ஆயுதமான வேற்படையை ஏவி விட்டான். “அடைக்கலம் புகுந்தவன் அழியப் பார்க்கலாகாது, நெடும் பழி தொடர்வதன் முன்னம் ஏற்பன் என் தனி மார்பினில்” என்று இலக்குவன் அந்த வேற்படையைத் தனது மார்பில் தாங்கிக் கீழே சாய்ந்தான். இலக்குவன் செய்தது புகழ் மிக்க அருஞ்செயலும் பெரும் தியாகமுமாகும். வீடணன் பிழைத்தான். அதே சமயத்தில் அவனும் கடுங்கோபம் கொண்டு தனது வலுமிக்க சக்தி ஆயுதமான தண்டாயுதத்தால் இராவணனுடைய தேரையும் தேர்ப்படைகளையும் சாரதியையும் அழித்ததான். போர்க்களத்தில் இராவணனுக்கும் வீடணனுக்கும் ஏற்பட்ட இந்த மோதல் போரில் ஒரு முக்கியமான குறிப்பிடத் தக்க நிகழ்ச்சியாகும். இலக்குவன் சஞ்சீவி மலை மருந்தால் மீண்டும் உயிர் பெற்றான். இராம - இராவணப் போர், இறுதிப்போர் சந்திப்பு தொடங்கியது.' “கருமமும் கடைக்கண் உறு ஞானமும் அருமை சேரும் அவிஞ்ஞையும் விஞ்ஞையும் பெருமை சால் கொடும் பாவமும் பேர் கலாத் தருமமும் எனச் சென்று எதிர் தர்க்கினார் ” கருமமும் கருமத்தின் முடிவில் உண்டாகும் ஞானமும், நன்மை பயக்காத அறியாமையும் அறிவும், பெருமை சால் கொடும் பாவமும் சற்றும் பிறழாத தருமமும் மோதுவதைப் போலச் சென்று எதிர்த்துத் தாக்கினர் என்று இராம - இராவணப் போரின் தொடக்கத்தைக் கம்பன் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். இராமன் பிரம்மாஸ்திரத்தால் இராவணனை வீழ்த்தினான். "அக்கணத்தில் அயன் படை ஆண்தகைச் சக்கரப்படை யோகுந்தழி இச்சென்று புக்கது அக்கொடி யோன் உரம், பூமியும் திக்கனைத்தும், விசும்பும் திரிந்தவே”