பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ылиал -2С5 "Сдеятили и твовал - эр сквапатеноо, 285 என்று இராவணன் வீழ்ச்சியடைந்ததைப் பற்றிக் கம்பன் குறிப்பிடுகிறார். போர்க் களத்தில் மாண்டு கிடக்கும் இராவணனுடைய முகப் பொலிவைப் பற்றிக் கம்பன் மிக அற்புதமான தமிழ்ச் சொற்களில் விவரித்துக் கூறுகிறார். “வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வியத் தெம் மடங்கப் பொரு தடக்கைச் செயலடங்க மயல் அடங்க ஆற்றல் தேயத் தம்மடங்கு முனிவரையும் தலையடங்கா நிலையடங்கச் சாய்த்த நாளின் மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான் உயிர் துறந்த முகங்களம்மா! ” இந்த அற்புதமான சிறந்த பொருள் பொதிந்த கவிதை வரிகளில் இராவணனுடைய ஆற்றல், கம்பீரம், சினம், மனம், வினையம், செயல்திறன், மயல் மற்றும் அவன் வீரம் போர்க்குணம் முதலிய அனைத்தும் அடங்கிய நிலையைக் காண்கிறோம். இராவணனுடைய போராற்றலைப் பற்றிக் குறிப்பிடும் போது இராமனைத் தவிர வேறு எவராலும் அவனை வெல்ல முடியாது என்று வீடணன் குறிப்பிட்டதை ஏற்கனவே பார்த்தோம். இப்போது, “கார்த்த வீரியனால் கட்டுண்ட இவனை நான் கொன்றதுஎனக்கு வெற்றியன்று” என இராமன் கூறிய போது வீடணன் அதை மறுத்து நெஞ்சு வெதும்பி ‘செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ” என்று கூறி, “ஆயிரம் தோளினானும், வாலியும் அரிதின் ஐய மேயின வென்றி, விண்ணோர் சாபத்தின் விளைந்த, மென்மை தாயினும் தொழத்தக்கான் மேல் தங்கிய காதல் தன்மை