பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 286 நோயும் நின் முனிவும் அல்லால் வெல்வரோ நுவலற் பாலார்” என்று வீடணன் இராவணனுடைய மேன்மையைப் பற்றியும் அவனுடைய நிறைகுறையைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறான். சீதையால் அவனுக்கு ஏற்பட்ட காதலும் அதனால் ஏற்பட்ட இராமனின் கோபமும் தான் இராவணனைக் கொன்றதே தவிர வேறு யாராலும் அவனை வெற்றி கொண்டிருக்க முடியாது என்று வீடணன் தாயினும் தொழத்தக்கானைப் பற்றிக் கூறுகிறான். "அன்ன தோ என்னா ஈசன், ஐயமும் நானும் நீங்கித் தன்னதோள் இணையை நோக்கி; விடணா தக்கது அன்றால் என்னதோ இறந்துளான் மேல் வயிர்த்தல்; நீ இவனுக்கு ஈண்டு சொன்ன தோர் விதியினாலே கடன் செய்யத் துணிதி என்றான்” "அப்படியானால் இறந்தவன் மீது நாம் வைராக்கியம் கொள்ள வேண்டாம். வேத விதிகளின் படி நீ ஈமக் கடன்களைச் செய்வாயாக’ என்று இராமன் வீடணனிடம் கூறினான்: வீடணன் இராவணனுடைய உடல் மீது விழுந்து புலம்பினான். இந்தப் பாடல்கள் சிறந்த அவலச் சுவை நிரம்பிய அரிய கருத்துச் செரிவு மிக்கப் பாடல்களாகும். அறநெறி, ஒழுக்கநெறி, மனிதாபிமான நெறி, மெய்யறிவு, நிறைந்த கருத்துக்களை வீடணனுடைய வார்த்தைகளில் காணலாம். 'உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு கனகி எனும் பெரு நஞ்சு, உன்னைக் கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர், நீயும் களப்பட்டாயே! எண்ணா தேன் எண்ணிய சொல் இன்றினித்தான்