பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கம்பநாட Фый “{3}ллиольшғышлей காவியமும்’ ." மனித குலம் முழுவதற்குமுரிய உலகளாவிய பொது நூலென்றும் பலதரப் பட்ட பலவகைப் பட்ட கருத்துக்களும் வெளிப் பட்டுள்ளன. இன்றும் உலவுகின்றன. சக்கரவர்த்தி இராஜ கோபாலச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் எழுதிய இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்) என்னும் நூலைப் பற்றி மீ.ப.சோமசுந்தரம் அவர்கள் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்கள். அந்தக் குறிப்பு அந்த நூலுக்கு ஒரு சிறிய முன்னுரையைப் போல வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பில் அவர் ஒரு உண்மை நிகழ்ச்சியான உரையாடலைப் பற்றிக் கூறியுள்ளார். அது வருமாறு, “இராயப்பேட்டை லாயிட் சாலையில் நான் குடியிருந்த மாடியின் கீழ் வீட்டிற்கு மலேயாவிலிருந்து என் நண்பர் விருந்தாளியாக வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு ராஜாஜி அடிக்கடி வந்து போவதைப் பார்த்த அந்த மலேயா நண்பர் ஒரு நாள் ராஜாஜியிடம் இராமாயணத்தைப் பற்றி ஒரு கருத்தை விவாதிக்க வேண்டுமென்று விரும்பி மாடிக்கு வந்தார். “ஆங்கில நூல்கள் பலவற்றை ஆழ்ந்து படித்து நன்கு தேறியிருந்தவர் அந்த நண்பர். இராமனையும் சீதையையும் ஒரு கதையில் வரும் முக்கிய பாத்திரங்கள் என்று கருதிப் பார்க்காமல் தெய்வங்களை வணங்குவது போலக் கும்பிட்டு, அந்தக் கதையின் நிகழ்ச்சிச் சுவையை அனுபவிக்க முடியாமல் நம் நாட்டு மக்கள் தங்கள் கண்களை மூடிக் கொள்கிறார்களே” என்று ராஜாஜியிடம் வருத்தத்தோடு பேசத் தொடங்கினார். அவர் மேனாட்டு இலக்கிய விமர்சனப்பாங்கிலே அழகாகப் பேசினார். ராஜாஜி புன்முறுவலோடு கேட்டுக் கொண்டே வந்தார். பிறகு பேச ஆரம்பித்தார். “நம்முடைய புனிதமான புராணக்கதைகளையெல்லாம் வெறும் உருவகங்களாகவும் ஈசாப் கதைகளாகவும் ஆக்கி விடுவது எனக்கு சம்மதமில்லை” இவ்வாறு தொடங்கினார் ராஜாஜி. “உருவகங்களைக் கொண்டு நாம் வாழ முடியுமா? கண்ணனும் பார்த்தனும், சீதையும், அனுமனும், பரதனும் பூஜைக்குரிய மூர்த்திகள். வெறும் கதாபாத்திரங்களல்ல. பெரியோர்களையும், வீர புருஷர்களையும் பார்த்து அவர்களைப் பின்பற்றுவது ஒருவிதம். கதைகளைப் படித்து அந்தக் கதாபாத்திரங்களைப் பின்பற்றுவது