பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. сыйшыл-Фай ”43)илишвиғытлё «ы»йцарий 24 - காமரசமா வென்றெல்லாம் விவாதிக்கப் பட்டன, பேசப் பட்டன. இன்னும் இராமாயணப் பாத்திரங்கள் பலவற்றைப் பற்றியும் குறிப்பாக இராமன், இராவணன், வீடணன், அனுமன், சீதை ஆகியோர் பற்றியும் பலவகைப் பட்ட விவாதங்கள் எழுப்பப் பட்டன. அத்துடன் சிலவகைப் பட்ட செல்வாக்குகளின் தலையீட்டின் மூலம் கல்வி நிலையங்களின் பாடப் புத்தகங்களில் கூட கம்ப ராமாயணப் பாடல்களின் எண்ணிக்கையும் முக்கியத்துவமும் குறைக்கப் பட்டன என்று கூடக் கூறலாம். நல்ல வேளையாக எரிப்பு வேலை வெற்றி பெறவில்லை. கம்பராமாயணம் என்றும் மகத்தான அறிவுச் செல்வம் தெய்வீக சக்தியுடன் நம்மிடம் தொடர்ந்து இருந்து கொண்டும் செல்வாக்கு செலுத்திக் கொண்டுமிருக்கிறது. இராமாயணம் பற்றி பலதரப் பட்ட கருத்துக்கள் கூறப் பட்ட போதிலும், விவாதிக்கப் பட்ட போதிலும் ஒரு உண்மையை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். இராமாயணமும், மகாபாரதமும் இந்திய நாட்டில் பழங்காலத்தில் எழுதப் பட்ட இரு மாபெரும் மகா அற்புதமான சிறப்பு மிக்க இதிகாசங்களாகும். இந்த இதிகாச நூல்களும் தொடக்கத்தில் வடமொழியான சமஸ்கிருதத்தில் முறையே வால்மீகி முனிவராலும், வியாச பகவானாலும் எழுதப் பட்ட போதிலும் அந்தக் கதைகள் பாரத நாட்டில் வழக்கில் உள்ள எல்லா மொழிகளிலும் அதற்கும் மேலும் காவியங்களாக பல சான்றோர்களால் பெரும் புலவர்களால் எழுதப் பட்டு பாரத நாட்டு மக்களிடம் பரவி உள்ளது. அவர்களின் உள்ளங்களில் அக்கதைகள் தெய்வீகக் காவியங்களாக வலுவாக இடம் பெற்றுள்ளன. அவைகள் பாரத நாட்டு மக்களின் பொது நூலாக, அனைவருக்கும் சொந்தமான அறிவுக் களஞ்சியமாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. பாரத தேசத்தில் கடந்த ஐயாயிரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு பூர்வமாக எத்தனையோ படையெடுப்புகளும், போர்களும், ஆட்சிகளும், ஆட்சி மாற்றங்களும் வந்து போய் விட்ட போதிலும் அவைகள் காரணமாக எத்தனையோ பாதிப்புகளும், கடுஞ் சேதங்களும் பெரும் நாசங்களும் ஏற்பட்ட போதிலும் மக்களுக்கு எத்தனையோ சொல்லொணாத்துன்ப துயரங்களும் ஏற்பட்ட போதிலும் இந்த இரு இதிகாசங்களும் இமயம் முதல் தென்கடல் வரையிலும் பாரதம் முழுவதிலும் மக்களுடைய உள்ளங்களில் நீங்காத இடம்