பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சினிவாசன் 29 இராமனுடைய பெருமையைப் பாராட்டி இந்த மாபெரும் காவியத்தைப் பக்தர்கள் பாதுகாத்தனர். மக்களுடைய உள்ளங்களில் நீங்காத இடத்தை நிலை பெறச் செய்தனர். பண்டித நூல் கம்பராமாயணம் தமிழில் விருத்தப் பாக்களாலான ஒரு மிகச் சிறந்த காவியம். கம்பன் தனது மாபெரும் காவியத்தை விருத்தப் பாக்களில் சிறந்த முறையில் சுவை மிகுந்து பாடியுள்ளதால் “விருத்தத்திற்கு உயர் கம்பன்” என்று புகழ் பெற்றார். தமிழ் படித்துப் புலவராகும் தகுதிக்குக் கம்பராமாயணம் படித்தலும் மிகவும் அவசியமாகும். தமிழ் இலக்கணப்படி அத்தனைக் குணச் சிறப்புகளும் அமைந்தது கம்பராமாயணம். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணமும் பொருந்தியது கம்பராமாயணப் பெருங்காவியம். ஒருவர் கம்ப ராமாயணத்தை மட்டும் இலக்கண சுத்தியோடு படித்தாலே அவர் பண்டிதனாவதற்குத் தகுதி பெற்று விடுகிறார் என்று கூறலாம். முன்பு குரு குலவழி முறையில் தமிழ் படித்தவர்கள் பலர் கம்ப ராமாயணத்தை முழுமையாகக் கற்றுத் தெளிந்தார்கள். கம்பநாடருடைய கவிதைகளைப் படித்து இன்புற்றார்கள், பெருமைப் பட்டார்கள். அன்னியராட்சிக் காலத்தில் நமத நாட்டில் ஐரோப்பியக் கல்வி முறை புகுத்தப் பட்டது. அதில் ஆங்கிலக் கல்விக்கே முதலிடம் கொடுக்கப் பட்டது. ஆங்கில மொழி, ஆங்கில மொழி இலக்கியம், ஐரோப்பிய வரலாறு, ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றிற்கே முதலிடம் கொடுக்கப் பட்டது. ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகள் படித்தவர்களே அறிஞர்களென மதிக்கப் பட்டார்கள். ஆங்கில அறிஞர்கள், ஆங்கிலம் படித்த இந்திய அறிஞர்கள் இந்திய இலக்கியங்களுக்கு இந்திய சாத்திரங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கவில்லை. இந்திய இலக்கியங்களின் மொழி உயர்வை, தெய்வீகத் தன்மையை கருத்துச் செறிவை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் அன்னியராட்சி காலத்தில்