பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ыйшейт — бәсъ әсрәлил ителә. --гу. Збойылғайт 4] கம்பனுடைய வருணனைகளைப் பற்றி மிகைப்பட உள்ளதாக ஒரு வாதம் எழுந்தது. பெண் பாத்திரங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இடையழகு, தொடையழகு, கண்ணழகு, கூந்தலழகு, அல்குலின் அகலம் போன்றவற்றைக் கவிஞர்கள் அழகு ரசனையுடன் எடுத்துக் கூறுவது இயல்பு. அது இலக்கிய மரபுமாகும். அது அழகியலைச் சார்ந்தது. எதையும் வர்ணிப்பது கவிஞர்களின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. பக்தி நூல்களான திருமுறைகள், திவ்யப் பிரபந்தம் முதலியவற்றில் கூட அத்தகைய அழகியல் வருணனைகளைக் காண்கிறோம். அழகியல் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. அத்துடன் பகுத்தறிவுக்கு ஒத்துப் போகாத நம்ப முடியாத உண்மைக்கு ஒவ்வாத பல நிகழ்ச்சிக் குறிப்புகள் பற்றிய விமர்சனங்கள் இலக்கியத்தில் சாரமற்றவை. உயர்வு நவிற்சியெல்லாம் அணியின் பாற்பட்டதாகும். அவை இலக்கிய இலக்கணத்திற்கு உகந்தவைகளேயாகும். கதாபாத்திரங்களின் மாயாஜால செயல்பாடுகளைப் பற்றி பகுத்தறிவு பூர்வமான சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாயா ஜாலங்கள் மந்திரங்கள் முதலியவை எல்லா பாத்திரங்களுக்கும் எல்லா நாடுகளின் இலக்கியங்களுக்கும் பொதுவானவை. அதில் ஒரு தலைப் பட்சமான வாதங்களுக்கு இடமில்லை. தொடக்கத்தில் வால்மீகி எழுதியது பத்தாயிரம் சுலோகங்கள் தான் என்றும் பின்னர் அவைப் படிப்படியாக வளர்ந்து ஒரு லட்சம் சுலோகங்களுக்கு மேல் பெருகி விட்டன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதே பிரச்சனை கம்பராமாயணத்திலும் உள்ளது. கம்பராமாயணத்தில் இப்போது பத்தாயிரத்து ஐநூறு பாடல்கள் உள்ளன. இவற்றில் பல பாடல்கள் இடைச்செருகல்களென பல அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். இந்த ஆராய்ச்சி ஒரு தனித்துறையாகும். அதை ஆராய்ச்சியாளர்கள் செய்யட்டும். அவ்வாராய்ச்சி முடிவுகளும் நமது பயன் பாட்டிற்கு வரட்டும் அதில் இலக்கிய அளவு கோலில் உண்மை நிலைக்கேற்றவாறு எடுக்க வேண்டியவைகளை எடுத்துக் கொள்ளலாம்.