பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை-அ.-சீனிவாசன் 55 இனிக் கம்பன் நான்காவது காண்டமான கிட்கிந்தா காண்டத்தில் அறிவுக்கு அறிவானவனைப் பற்றி மேலும் தெளிவுபட விளக்கிக் கூறுவதைக் காண்கிறோம். “மூன்றுஉரு எனக்குணம் மும்மையாம் முதல் தோன்று உரு எவையும், அம்முதலைச் சொல்லுதற்கு ஏன்றுஉரு அமைந்தவும் இடையின் நின்றவன் சான்று உரு உணர்வினுக்கு உணர்வது ஆயினான் ” என்பது அக்காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலாகும். வெள்ளை, சிவப்பு, கருப்பு ஆகிய மூன்று நிறங்களைக கொண்டதும், சாத்துவிகம் ராஜசம் தாமசம் ஆகிய /முக்குணம் கொண்டதுமான மூலப்பொருள், தோன்றும் பொரு த்திலும் உள்ளான். அந்தப் பொருள்கள் அனைத்தும் அவனே அந்த மூலப் பொருளைச் சொல்லுவதற்கு ஏற்ற வடிவம் பெற்று அமைந்தவைகளும், அவைகளையெல்லாம் தன்னகத்தே கொண்டிருப்பதற்குச் சான்றாகவுள்ளது. இந்த மூலப்பொருளின் உள்ளடக்கம் இன்னும் விரிவான பலபரிமாணங்களையும் கொண்டது. மூன்று நிறங்கள், மூன்று குணங்களுடன் மூன்று செயல்கள் (படைத்ததல், காத்தல், அழித்தல்)- ஆக்கல் நிலைநிறுத்தல் நீக்கல்) முப்பால் (அறம்பொருள் இன்பம் ஆகிய புருடார்த்தங்கள் - பயனிடுகள்) முதலிய பலவும் அடங்கும். இந்த மூலப்பொருளே உணர்வுக்கு உணர்வாக அதாவது அறிவுக்கு அறிவாகவுள்ளது என்று அறிவுக்கு அறிவானதையும், அறிவுக்கு அறிவாக இருப்பவனைப் பற்றியும் கம்பன் மிக நுட்பமாகக் குறிப்பிட்டுக் காட்டுவதைக் காண்கிறோம். ஐந்தாவதான சுந்தர காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலைக் கம்பன் கீழ்க் கண்டவாறு அமைத்துள்ளான். சுநதர காண்டம் என்பது அழகான பல செய்திகளை மகிழ்ச்சி தரும் பல செய்திகளைக் கூறும் பகுதியாகும்.