பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்



"தீண்டிலன் என்னும் வாய்மை
               திசைமுகன் செய்த முட்டை
கீண்டிலது, அனந்தன் உச்சி
               கிழிந்திலது, எழுந்து வேலை
மீண்டில; சுடர்கள் யாவும்
               விழுந்தில; வேதம் செய்கை
மாண்டிலது–என்னும் தன்மை
                வாய்மையால்; உணர்தி மன்னோ”

(கம்பன்-6039)

என்றும் கூறுகின்றான். இராமனும் அனுமனின் நடத்தையாலும் வாக்கினாலும் 'இவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று' என்று தெளிந்தனன்.

தாடகை வதம்

கம்பனின் இராமகாதையில் இரண்டு சிறு போர்களும் ஒரு பெரும் போரும் நடைபெறுகின்றன. முதற்போர் தாடகையுடன் நடத்திய போர். தாடகை உருவத்தால் பெண். ஆனால்—


"... அரும் பாவம் ஈண்டி, ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்”

(கம்பன்-360)

என்று விசுவாமித்திரர் தாடகை பற்றி இராமனுக்கு விளக்கினார். தாடகை, மருத நிலத்தை அழித்துப் பாலைவனமாக்கி விட்டாள். எது போல எனில், உலோபகுணம் என்ற குணம் ஒன்றினாலேயே எல்லாக் குணங்களும் அழிந்துவிடுவது போல், தாடகை மருத நிலத்தைப் பாலைவனமாக்கி விட்டாள்! ஆயினும் இராமன், தாடகை பெண்ணாக இருப்பதால் அவளோடு போரிடத் தயங்கினான். மீண்டும் விசுவாமித்திரர் தாடகை தீமையின் வடிவம்; அவள் பெண் உருவமுடையவளே தவிர, பெண் அல்லள் என்று கூறித்