பக்கம்:கம்பன் கலை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட புலன் அடக்கம் 97 முதலாவது கருங்கல், ஏன் என்றால் அதற்குப் பொறி புலன்கள் கிடையாது. ஐந்து பொறி புலன்களுமில்லாமல், கோயிலிலே நிற்கின்ற அந்தக் கருங்கல் மோட்சத்துக்குப் போகவேண்டாவா? போக வில்லையே! ஆண்டவனை ஏந்தி வருகின்ற பல்லக்கிலே இருக்கின்ற மரம் இருக்கிறதே அதுகூட மோட்சம் போகவேண்டும். போகவில்லையே! ஏன்? ஐந்து பொறிபுலன்கள் மரத்துக்கும் கல்லுக்கும் இல்லையே! அப்படியில்லாத அந்த மரமும் கல்லும் ஏன் மோட்சம் போகவில்லை? அந்தக் கேள்வியைத்தான் வள்ளுவர் இக்குறளில் கேட்கிறார். கேவலம் ஐந்து பொறிகளையும் அடக்கிவிட்டதனாலே பயன் இல்லை. பின்னே எது வேண்டும்? மெய்யுணர்வு வேண்டும் என்றார். பொறிபுலன்களை அடக்குவது பெரிதன்று. மயக்கம் போட்டிருக்கிறவர்கள், அபின் கஞ்சா முதலியவற்றைப் பயன்படுத்துபவர்கள் அந்த மோன நிலையிலே இருந்து விட்டார்களானால், ஒரு சிந்தனையும் வராது அவர்களுக்கு. மோட்சம் போகிறதற்கு இதுவா வழி? இந்நிலையில் இவர்கட்கு ஐந்து பொறிபுலன்களும் அடங்கிவிட்டனவே. மோட்சம் போய்விடலாமா? இப்படியெல்லாம் கருதிப் பிழை செய்வார்கள் என்று கருதித்தான், மெய்யுணர்வு வேண்டுமே தவிர, ஐயுணர்வை அடக்குவதனாலேயே பிரமாதமான காரியம் ஒன்றையும் சாதித்துவிட முடியாதென்று வள்ளுவர் கூறுகிறார். இந்த அடிப்படை மனத்திலே வைத்துக் கொண்டு கம்பனுடைய படைப்புகளுக்கு வர வேண்டும். புலன் அடக்கம் செய்தவர்கள் புலன் அடக்காது இருந்தவர்கள் என்ற இருவகையினரையும் காண்டல்வேண்டும். புலன் அடக்கம் செய்தவர்கள் இருக்கிறார்களே அவர்களும் புலன்களோடு பிறந்தவர்களே. ஆனால், அந்தப் புலன்களுடைய அளவறிந்து பயன்படுத்துகிறார்கள். இனி, புலன் அடக்காதவர்கள் இருக்கிறார்களே அவர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/107&oldid=770615" இலிருந்து மீள்விக்கப்பட்டது