பக்கம்:கம்பன் கலை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 * கம்பன் கலை புலன்களோடு பிறந்தவர்கள்தாம். ஆனால், அதனை அடக்கிப் பழகாததனாலே பெருந்துன்பப்பட்டவர்கள். தாங்கள் மட்டுமின்றித் தங்களோடு சேர்ந்தவர்களையும் பெருந்துன்பத்தில் ஆழ்த்தினார்கள். இந்த வேறுபாட்டை மிக அழகாக வைத்துக் காட்டுகிறான் கவிஞன். அப்படியானால், அவர்களுக்கு முன்னே பொறி புலன்களை அடக்கியவர்கள் எத்தனையோ பேர் உண்டாயிற்றே. அவர்களைப் பார்த்து ஏன் இந்த அடக்காதவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று வினவலாம். நியாயம்ான கேள்விதான். முன்னர் போகிறவன் வழுக்கி விழுந்தால் பின்னர்ப் போகிறவன் கட்டை விரலை ஊன்றி வைத்துப் போவான் அல்லவா? இல்லை. நான் போகமாட்டேன் என்று தடித்தனமாகப் போனால் இவனும் கீழே விழுந்துதான் ஆகவேண்டும். ஆகவே பொறிபுலன்களை அடக்கியவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறவர்கள், ஏன் இந்தத் தவறு செய்ய வேண்டும்? அங்கேதான் படைப்பினுடைய இரண்டாவது ரகசியம் இருக்கிறது. பொறிகளை நமக்குத் தந்த இறைவன் அவற்றை அளவறிந்து பயன்படுத்துகின்ற உரிமையையும் நம்மிடத்திலே தந்துவிட்டான். விலங்குகளுக்கும் மனிதனுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு இதுவே. இதே பொறிபுலன்கள் பெற்றிருக்கின்ற விலங்குகள் அவற்றை அடக்கியாளும் தன்மை உடையன அல்ல. மாடு இருக்கிறது. அதற்குக் காது உண்டு. இனிய ஓசையாகிய புல்னை அது அனுபவிக்க முடியும். ஆனால், வேண்டா என்றால் கேட்காமல் இருக்க முடியாது மாட்டுக்கு; கேட்டுத்தான் தீரவேண்டும். கண்ணுண்டு மாட்டுக்கு; காணாமல் இருக்க முடியாது. - - மனிதனுக்கு அவ்வாறன்று. காது திறந்திருக்கும்; ஆனால், கேளாமலேயே இருக்கமுடியும். ஆழ்ந்த சிந்தனையில் நடக்கும்பொழுது எதிரே வருபவரை, நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/108&oldid=770616" இலிருந்து மீள்விக்கப்பட்டது