பக்கம்:கம்பன் கலை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட புலன் அடக்கம் , 99 கண்கள் திறந்திருப்பினும் காணுவதில்லை. அவர் அழைத்தாலும் நம் காதுகள் கேட்பதில்லை. காரணம் கண்ணாகிய புலன் மனத்தின்வழியே சேர்ந்த பொழுது தான் தொழிற்படுமே தவிர, தனியாகக் கண்ணுக்கு வேலையில்லை. இது மனிதன் பெற்ற பெருமை. இந்தப் பெருமையின் அடிப்படையை உணர்ந்து கொண்டால், புலன்களினாலே உண்டாகின்ற துன்பத்தின் எல்லையையும் ஒருவாறு உணரமுடியும். எவ்வளவுதான் அதை அடக்கவேண்டுமென்று முயலத் தொடங்கினாலும் இயல்வதில்லை. மிகப் பெரியவர்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய வாழ்விலேகூட அதனைப் பார்க்கின்றோம். தொண்டு கிழவராகிய திருநாவுக்கரசர் பாடுபட்டவர், பாவம் ! "மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டளவு உயரத் தூண்டி உய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவாவண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சால செய்வ தொன்று அறிய மாட்டேன் திருப்புக லூரணிரே' பொறிகள் ஐந்தையும்பற்றிச் பேசவந்த நாவுக்கரசர், சால வலியர் போலும் என்று வருந்துகிறார். இனி, கிழவராகிய அவர் புலன்களை எதிர்த்துப் போராடச் சக்தியில்லாதவர் என்று நினைக்கலாம். இளமையுடன் இருந்து எதற்கெடுத்தாலும் சண்டை போடக்கூடியவர் இருக்கிறாரே ஞானசம்பந்தர், அவரும் இவ்வாறே. பாடுகிறார். ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்; மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே என்ற பாடலில் ‘என்னுள்ளே ஐந்து பேர் நின்று கொண்டு, என்னை வாழ விட மாட்டேன் என்கிறார்கள் ஐயா! இனி என்ன செய்ய முடியும்?' என்கின்றார். மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே என்று பாடுகின்றார். எனவே, இந்தப் பொறி புலன்களை அடக்குவது என்பது அவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/109&oldid=770617" இலிருந்து மீள்விக்கப்பட்டது