பக்கம்:கம்பன் கலை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட புலன் அடக்கம் 101 நாட்டிலே ஒடுகின்ற அந்தச் சரையு நதியைமட்டும் வருணிப்பது முக்கியமன்று. அதைக்காட்டிலும் முக்கியமான ஒன்றையும் சொல்லுகிறான் கம்பன். கோசல நாட்டிலே உள்ள சரையு நதி, ஒருவகையாக ஒடிக் கடலிலே கலந்து விடுகிறது. அதே போல, கோசல நாட்டிலே தோன்றிய மக்களும், ஒரு வகையாக வாழ்ந்து வீடுபேற்றை அடைகின்றார்கள். இரண்டுக்கும் பொருத்தம் காட்ட வருகின்றான் புலவன். .* கோசல நாட்டிலே உள்ள சரையு நதி எவ்வாறு கடலைச் சென்று அடைந்தது? அது விருப்பம் போல் ஒடியிருந்தால் கடலை அடைந்திருக்க முடியாது. வரம்பு மீறிச் சென்றிருந்தால் தானும் கெட்டு, பிறருக்கும் அழிவை உண்டாக்கியிருக்கும். ஆனால், ஒரு வரையறைக்குக் கட்டுப்பட்டு, ஓர் ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு, தன்னுடைய கரையிலிருந்து வழுவிச் செல்லா முறையிலே சரையு நதி சென்றது. அதுபோல, கோசல நாட்டு மக்களும், ஒரு வரையறையுடன்கூடிய எல்லைக்குட்பட்டுத் தங்களுடைய வாழ்விலே முன்னேறிச் சென்றார்கள். தண்ணிர் ஓடுவதால் தன் நெறியைக் கட்டுப்படுத்த இயலவில்லை; எனவே, நீரே இல்லாமல் வறண்டு போய் விடுகிறேன் என்று சரையு சொல்லியிருக்குமேயானால், யாருக்கும் பயன் இல்லாமல் போய்விட்டிருக்கும். அதுபோல, கோசல நாட்டிலே உள்ள மக்கள், பொறி புலனாகிய தொல்லையெல்லாம் வைத்துக்கொண்டு எங்களால் வாழ முடியவில்லை. எனவே, நாங்கள் பொறி புலன்களையெல்லாம் பயன்படுத்தாமல் காட்டிற்குப் போகிறோம் என்று சொல்லியிருந்தார்களேயானால், அவர்கட்கும் பிறர்க்கும் நன்மை பிறந்திருக்க முடியாது. ஆறும் ஓடவேண்டும்; அதில் தண்ணிரும் ஒடவேண்டும்; அதுவும் கரைகடவாமல் ஒடவேண்டும். அப்பொழுதுதான் அது பிறருக்குப் பயன்படும். அதுபோல, கோசல நாட்டிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/111&oldid=770620" இலிருந்து மீள்விக்கப்பட்டது