பக்கம்:கம்பன் கலை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கம்பன் கலை ஒட்டே னரசோடொழிப்பேன் மதுரையும் என் பட்டிமையுங் காண்குறுவாய் (சிலம்பு) என்று எல்லை மீறிய அகங்காரத்திலே ‘அரசோடு மதுரையையும் அழிப்பேன்' என்று நினைக்கின்ற நினைவு மன்னிக்க முடியாத நினைப்பாகும். தனிப்பட்ட முறையில் அரசன் இவர்களுக்குத் தீங்கிழைத்தான். அந்தத் தீங்கினை உணர்ந்த பிறகு அவனைத் தண்டிப்பேன்’ என்று சொல்வதே அவ்வளவு சரியானதன்று. ஆனால் ஒரு பாவமும் அறியாதி மதுரையைப் பழிவாங்குவேன்' என்று நினைப்பது அகங்காரத்தின் எல்லைமீறிய நிலையாகும். இந்த நிலையிலே அகங்காரம் வளர வளர, இறையருள் அவளை ஆட்கொள்ள நினைக்கிறபோது, இந்த அகங்காரத்தைப் போக்க முற்படுகிறது. கண்ணகியின் அகங்காரத்தைப் போக்க முற்பட்ட முறை வேறு; பரசுராமனது அகங்காரத்தைப் போக்க முற்பட்ட முறை வேறு. # கண்ணகியைப் பொறுத்த மட்டில் அவள் வெளியிலே வருகிறாள். மதுரையை எரித்து விடுகிறேன் என்று வெளியே வரும்போது மதுராபுரித் தெய்வம் அவள் பின்னே வந்து மிகப் பொறுமையாக, அமைதியாக ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்துத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோ டைரசுகே டுறுமெனும் உரையு முன்டே நிரைதொடி யோயே பண்டே ஓர் ஏவலுடையேன் (சிலம்பு) என்று சொல்கிறாள். ஏற்கெனவே எனக்கு இப்படி ஒரு கட்டளை இருக்கிறது' என்று சொன்னவுடனே" கண்ணகியின் அகங்காரம் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/12&oldid=770629" இலிருந்து மீள்விக்கப்பட்டது