பக்கம்:கம்பன் கலை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட புலன் அடக்கம் 113 என்று பேசுகிறான். கோபத்தை அடக்குதல் என்பதும் புலனடக்கத்தில் ஒன்று. புலனடக்கத்தின் உச்சியிலே நிற்கின்ற பரதனுக்கு இவ்வளவு கோபம் வரலாமா? முறையல்லவே! அதுவும் தாயைப் பார்த்தா இவ்வாறு கோபம் கொள்வது? அங்கேதான் ஒரு பேருண்மையை அறியவேண்டும். புலனடக்கம் தேவை. சினம் அடங்கிவிட வேண்டும். அது கடினம்தான். சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும் என்று சொல்லும் பொழுது சினம் அடங்கக் கற்றல் அவ்வளவு எளிதன்று என்று தாயுமான அடிகள் கூறுகிறார். அப்ப்டியானால் அந்த அடிப்படைத் தத்துவத்திலேயே தவறிவிட்டானா பரதன்? இல்லை. சினம் அடங்கக் கற்றவன்தான். ஆனாலும், அதற்கும் ஒர் எல்லை உண்டு. தனக்கு ஊறு நேர்ந்துவிடத்துச் சினத்தைத் தவிர்த்துவிட வேண்டும். ஆனால், கொள்கைக்கு ஊறு நேர்ந்த இடத்துச் சினம் வந்தே தீரல்வேண்டும். இதற்கு விளக்கம் சொன்னவர் நம்முடைய மகாத்மா காந்தி ஒருவர்தான். பிற பெண்களுக்குத் துன்பம் செய்கின்றவர்களை நாங்கள் பார்த்துக் கொண்டு அஹிம்சையைக் கடைப்பிடித்துச் சும்மா இருந்துவிடலாமா? என்ற வினாவிற்கு கை இரண்டையும் சும்மா வைத்துக்கொண்டு பிறர் துயரத்தைப் பார்த்துக்கொண்டு அஹிம்சை என்று கூறிக்கொண்டு சும்மா இருப்பவன் முட்டாள் என்றார். ஏன்? உனக்கு வருகின்ற துன்பத்தைப் பொறுப்பது அஹிம்சையின் பாற்படுமே தவிர கண்ணுக்கு எதிரே ஒருவர் படும் துன்பத்திலிருந்து அவரைக் காப்பாற்ற வில்லையானால், உன்னுடைய கை இருந்தும் பயன் என்ன ? இந்த விளக்கம்தான் கம்பனால் பேசப்படுகின்றது. பரதனாகிய தனக்குக் கைகேயி தீங்கு செய்திருந்தால், அதைப்பற்றி அவன் கவலையுற மாட்டான். ஆனால், எம் முன் நீ, தம் முன் நீ, என் வழிபடு தெய்வமும் நீ என்று பரதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/123&oldid=770633" இலிருந்து மீள்விக்கப்பட்டது