பக்கம்:கம்பன் கலை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட புலன் அடக்கம் ( 115 பொழுது அதே காதல் வரம்பு கடந்ததாய், புலனடக்கத்தின் அப்பாற் பட்டதாய், புலன்களையே கொல்லுவதாய், புலனுக்கு அடிப்படையாய் இருக்கின்ற மனத்தைச் சரிப்பதாய், அந்த மனத்தின் தலைவனாய் இருக்கின்ற இராவணனையும் அழிப்பதாய் அமைந்துவிட்டது. ஆதலின், புலன் அடக்கம் என்பது நெருப்புப் போன்றது. புலன்களை வைத்துத்தான் வாழவேண்டும். நெருப் பில்லாமல் வாழ முடியாது. ஆனால், நெருப்பிற்கு உரிய இடம் எங்கே? அதனுடைய எல்லை எது? அதனுடைய பயன் யாது என்பதை ஆராய்ந்து, வேண்டிய இடத்தில் பற்ற வைத்து, வேண்டிய அளவு பற்றவைத்து, எவ்வாறு அதனால் பயனடைவது அறிவுடைமையோ அவ்வாறு ஐந்து பொறி புலன்களையும் வைத்துக்கொண்டு எல்லையிலே நின்று, அதனால் ஏற்படுகின்ற பயனையும் பெற்று, ஐந்தையும் அடக்கக் காட்டுக்கு ஓடாமல் வீட்டிலேயே இருந்து பயனடைவது இந்தத் தமிழனுடைய பண்பு. இந்த அறத்தைத்தான் பரதனுடைய வாழ்வாகஇராமனுடைய வாழ்வாக-சீதையினுடைய வாழ்வாக வைத்துக் காட்டுகின்றான் கம்பநாடன். ஆனால், நெருப்பைக் கூரையிலே பற்ற வைத்தது போல, புலனடக்கத்தை விட்டுவிட்டு ஒருவன் பெருந் தவறிழைக்கின்றான். அதுமட்டுமா! புலனடக்கத் தேவையை தசரதனிடத்திலேயும் வைத்துக் காட்டுகின்றான் கவிஞன். அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்ட அவனுக்கு இன்னுங்கூட ஆசையை அடக்கத் தெரியவில்லை. மைந்தனை அலாது உயிர் வேறு இல்லாத மன்னன் என்று நினைக்கும் பொழுது, அது போற்றத்குந்த பண்பாடுதான் என்கின்றோம். ஆனால், மைந்தரின்மேல் ஆசையாக இருப்பினும், ஆசை எல்லை மீறுமேயானால், மைந்தன் கடவுளாகவே இருப்பினும் அவன் மாட்டு அளவு கடந்து ஆசை வைத்தமையின் தசரதன் உயிரையே இழக்கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/126&oldid=770636" இலிருந்து மீள்விக்கப்பட்டது