இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
116 கம்பன் கலை இது கருதியே போலும் "ஆசை அறுமின்கள்; ஆசை அறுமின்கள், ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்" என்று திருமூலர் எச்சரிக்கின்றார். இறைவன் தந்த பொறி புலன்களை அடக்கி ஆளத் தெரிந்துகொண்டால், மனிதன் தெய்வமாகிறான். எடுத்துக்காட்டு: பரதன், அனுமன், இராமன் ஆகியோர். வரத்தால் மிக்கிருப்பினும் புலனடக்கம் இல்லையெனில் மனிதன் விலங்காகி மடிகின்றான். எடுத்துக்காட்டு: சூர்ப்பணகை, இராவணன் முதலியோா. இதுவே கம்பன் கண்ட புலனடக்கம்.