பக்கம்:கம்பன் கலை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபெரும் அவதாரங்கள் 5 தான்தான் இந்த மதுரையை அழிக்க வேண்டுமென்று நினைத்தவளுக்கு அப்படி இல்லை; ஏற்கெனவே நடைபெற வேண்டிய ஒன்று என்று மதுராபுரித் தெய்வமே கூறிவிட்ட நிலையில், அவளுடைய அகங்காரம் முற்றிலுமாக இறங்கிவிடுவதைக் காண்கின்றோம். - இனி பரசுராமனைப் பொறுத்த மட்டில், இருபத்தொரு தலைமுறை அரசர்களை வேரோடு களைந்தானே தவிர அவனுடைய அகங்காரம் குறைந்ததாகத் தெரியவில்லை. உலகத்தை எல்லாம் வென்றான். அரசர்கள், கடித்திரியர்கள் என்று சொல்வதற்கு யாருமே இல்லையென்று பூமியைக் காச்யபன் என்ற முனிவனுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டான். காச்யபனுடைய நாட்டில்தான் தங்கியிருக்கிறான். பரசு ராமனுடைய அகங்காரம் இப்படி நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே செல்கிறதே. இதைத் தட்டவேண்டும் என்று காச்யபன் நினைக்கிறான். முனிவன் தனக்கே உரிய முறையில் ஒருநாள் பரசுராமனை அழைத்து, “பரசுராமா, இந்த நாடு முழுவதையும் உலகம் முழுவதையும் எனக்குத் தானமாகக் கொடுத்துவிட்டாய் அல்லவா?” "ஆமாம்.” "எனக்குத் தானமாகக் கொடுத்த இடத்தில், தானம் கொடுத்தவனாகிய நீ எப்படித் தங்கியிருக்கிறாய்?" என்று கேட்கிறான். புத்தியுள்ளவனாக இருந்திருப்பானாகில் பரசுராமன் தன் அகங்காரத்திற்குப் பங்கம் என்று நினைத்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மறுபடியும் அகங்கார சன்னத்தனாகித் தன் மழுவை மேல்கடலிலே எறிய, அங்கே ஒரு பூமிப்பிரதேசம் உண்டாக்கி அங்கே சென்று தங்கி விட்டான் என்பதுதான் வரலாறு. ஆக, பரசுராமனுடைய அகங்காரத்தை அழிப்பதற்குக் காச்யபனாலும் முடியவில்லை என்பதை அறிகின்றோம். * -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/13&oldid=770640" இலிருந்து மீள்விக்கப்பட்டது