120 கம்பன் கலை அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்" எனவே வாலியையும், அவன் பெற்றிருந்த வரத்தின் வன்மையையும் நன்கு அறிந்த பின்னரே இராமன் சுக்ரீவனிடம் தலைமையோடு தாரமும் தருவன் என்று பேசுகிறான் என்றால் வாலியை எவ்வாறு கொல்ல வேண்டும் என்பதை இராமன் அப்பொழுது முடிவு செய்துவிட்டான் என்றுதான் கொள்ள வேண்டும். இந்த ஊகம் சரியானதே என்பதைக் கம்பன் பாடலும் சான்றாக நின்று அறிவுறுத்துகின்றது. சுக்ரீவனைப் பார்த்து நீ வாலியை அழைத்து அவனுடன் போரிடுக' என்று கூறவந்த இராகவன், - 'அவ்விடத்து, இராமன், நீ அழைத்து வாலி ஆனது ஒர் வெவ்விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை, வேறு நின்று, எவ்விடத் துணிந்து அமைந்தது; என் கருத்து இது என்றனன் தெவ் அடக்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா (வா.வ.ப.) வேறு நின்று (மறைந்து நின்று எவ்விடத் துணிந்து அமைந்தது: என் கருத்து இது என்று கூறினான். இதனைக் கேட்ட சுக்கிரீவன் இராமனுடைய இச்செயலைச் சிந்தித்தான் என்பதால் இது சீரிய செயலன்று என்பதைச் சுக்கிரீவன் உணர்ந்தாலும் இராமன் தக்க காரணமின்றி இம் முடிவுக்கு வரமாட்டான் எனக் கருதி வாளா இருந்து விட்டான். சுக்கிரீவன், வாலி இருவர் போரிடை, சுக்ரீவனை இரு கைகளாலும் தூக்கி நிலத்தில் எறிவதற்கு வாலி முற்படுகையில் இராமன் அம்பு அவன் மார்பில் பாய்ந்தது.
பக்கம்:கம்பன் கலை.pdf/131
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/page131-708px-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf.jpg)