பக்கம்:கம்பன் கலை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ல் கம்பன் கலை அப்படியானால் வேறு வழி என்ன? வரலாறுகளிலே பார்ப்போமேயானால் மிகப் பெரிய அகங்காரம் இது. இது சாதாரணமாக நாம் ஆணவம் என்று சொல்லுகிறோமே - ஒருவருக்கொருவர் திமிர் பிடித்தவன் - அகங்காரம் பிடித்தவன் - ஆணவம் பிடித்தவன் என்று, அதோடு சேர்ந்தது என்று தயவு செய்து எண்ணிவிட வேண்டாம். உலகம் முழுவதையும் ஒன்றாக ஆக்கி, அது என்னுடையது என்று நினைக்கின்றதாகிய - யூனிவர்சல் ஈகோ என்று சொல்லுகிறோமே-அப்படிப்பட்ட மாபெரும் அகங்காரம். இரணியனுடைய அகங்காரம், சூரபத்மனுடைய அகங்காரம், பரசுராமனுடைய அகங்காரம் இவை அனைத்தும் ஒரே வகையைச் சேர்ந்தவை. அனைத்தும் இறைவன் என்று நினைக்கின்றது மிக உயிருந்த நிலை. அனைத்தும் நான் என்று நினைப்பது ஏறத்தாழ அந்த நிலைதான். ஒரு சிறு நூலிழை மாறு பட்டது. அனைத்தும் இறைவன் என்று நினைக்கும்போது எல்லையற்ற உயரத்திற்குச் சென்று விடுகின்றோம். அனைத்தும் நான் என்று நினைக்கும்போது அதுவும் அதே உயரம்தான். ஆனால் கீழே நிற்கின்றோம். அடுத்த படிக்குச் செல்ல முடியாது. இந்த "நான் தடுக்கின்றது. இந்த நான்கு பேர்களுடைய அகங்கர்ரங்களையும் சிந்திப்போமேயானால் - இரணியன் பேசுகின்றானே "எந்த நிலையிலும் என் தலை புனிவதில்லை; ஊடல் காலத்தில் கூட மகளிரை வணங்கும் பழக்கம் இல்லை. நீ சொல்லுகின்ற நாராயணனைக் கொன்று என் "வாளினை வணங்கல் அல்லால்" என்று சொல்லுகின்றான். இந்த நான்கு அகங்காரங்களிலும் ஒரு பொதுத்தன்மையினைக் காணலாம். இதனுடைய அகங்காரத்தைப் போக்க ஏனையோரால் முடியாது, முனிவர்களாலும் முடியாது, தேவர்களாலும் முடியாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/14&oldid=770651" இலிருந்து மீள்விக்கப்பட்டது